சென்னை, ஆக. 11- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி மற் றும் கல்லூரிகளின் கல் வித்தரம் மேம்படுத்தப் படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சென்னையில் கூறி னார்.
சென்னை, நுங்கம்பாக் கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத் தில், கோவில்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேம்பாடு குறித்த சீராய் வுக் கூட்டம் நேற்று (10.8.2021) நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமை தாங்கினார்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செய லாளர் டாக்டர் பி.சந்திர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுரு பரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச் சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந் தார். அதன்படி தமிழகத் தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான 36 பள்ளி கள், 5 கல்லூரிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல் லூரிகளில் அடிப்படை தேவைகள், மாணவர் களின் சேர்க்கை, கல்வித் தரம் மேம்படுத்தப்படும்.
பள்ளிகள் மற்றும் கல் லூரிகளின் பிரதிநிதிகள் விரைவில் தங்களுடைய பள்ளிகளுக்கு தேவை யான செயல்முறை திட் டத்தை தயார் செய்து ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அனுப்ப வேண் டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், நாட்டு நலப் பணி திட்ட இயக்கம் போன்ற சமூக அமைப்பு களை ஏற்படுத்தி அதில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
கோவிலுக்கு சொந்த மான கல்வி நிறுவனங் களை மேம்படுத்த சிறந்த கல்வியாளர்களை கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். பள்ளிகள் மற்றும் கல் லூரிகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கல்லூரி யில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயநிதி பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர் கள், பணியாளர்களுக்கு பணிநியமனம் மற்றும் ஊதியம் முரண்பாடின்றி ஒரே மாதிரியாக வழங்கப் படும்.
பள்ளிகள் மற்றும் கல் லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய பணிமூப்பு மற்றும் தகு தியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப் படும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment