புதுடில்லி, ஆக. 2- மிகப் குறைந்த விலையிலான மின்சார வாகனத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதா வது: நடப்பு நிதியாண் டில், டாடா மோட் டார்ஸ், உள்நாட்டு வணி கத்திலும், அதன் பிரிட் டிஷ் துணை நிறுவன மான, ‘ஜாகுவார் லேண்டு ரோவர்’ நிறுவனத்திலும், கிட்டத்தட்ட 29 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.
இதற்கிடையே, மின் சார வாகன தயாரிப்புக் காக, தனியாக நிதி திரட் டவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மின்சார வாக னங்களை பொறுத்த வரை, 2025ஆம் ஆண் டுக்குள், 10 மாடல்களில் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள் ளோம். சகாய விலையி லான மின்சார வாக னத்தை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். ‘நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில், நிறுவனத் தின் மொத்த விற்பனை யில் 25 சதவீதம், மின்சார வாகனங்கள் பிரிவின் வாயிலாக இருக்கும்’ என எதிர்பார்க்கிறோம்.
இது தற்போதைய நிலையை விட, 2 சதவீதம் அதிகமாகும்.மேலும், மின்சார வாகனங்களுக் கான பேட்டரி தயா ரிப்பை துவக்குவது குறித் தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தனி நிறு வனமாக இருக்கும். அத் துடன் வரும் ஆண்டுக ளில் குறைந்தபட்சம், 1,000 மின்னேற்று நிலையங் களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.
No comments:
Post a Comment