புதுடில்லி, ஆக.10- கொலிஜியம் பரிந் துரைகளை ஏற்று நீதிபதிகளை நிய மனம் செய்வதில் மாதக்கணக்கிலும், ஆண்டு கணக்கிலும் ஒன்றிய அரசு தாமதம் செய்வதாக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
இறக்குமதி குவிப்பு வரி தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கு ஒன்றில், முன் கூட்டி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, டில்லி உயர்நீதிமன்றம் 50 நீதிபதிகளு டன் இயங்குவதால் உடனடி விசார ணைக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
60 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 29 நீதிபதிகள் மட்டுமே இருப்பதால் வழக்குகளை விரைந்து விசாரித்துத் தீர்வு காண முடியாத சூழல் இருப்பதாக நீதிபதிகள் வேதனை தெரி வித்தனர். 20 ஆண்டுங்களுக்கு முன்பு எங்களில் ஒருவர் (நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்) நீதிபதியாக நியமிக்கப் பட்டபோது, அந்த நீதிமன்றத்தின் 32 ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டோம், நீதிமன்றத்தின் மொத்த பலம் 33 நீதிபதிகள் மட்டுமே என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் கொலிஜியம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்து வதில் ஒன்றிய அரசு ஓராண்டு தாண் டியும் தாமதிப்பதாக நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில் ஒன்றிய அரசு ஒத்துழையாமையை கடைபிடிப்பதாகவும் நீதிபதிகள் இந்த உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment