தருமபுரி,ஆக.9- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி யிலிருந்து பொம்மிடி செல்லும் வாணியாறு பாலம் அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனிநபர்கள் பெரியாண்டிச்சி என்னும் கடவுளச்சியின் மண் சிலையை முதலில் வைத்தார்கள், அப்போதே கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை வேடிக்கை பார்த்ததின் விளைவாக. தற்போது அவர்கள் சிமெண்ட் சிலையை செய்து அருகே ஒரு கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்! நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஏழை எளிய மக்களின் குடிசை வீடுகள்,இந்த நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் சிலையை அகற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், கோயில் கட்டுவதை மட்டும் தடுக்காமல்,அவற்றை அகற்றாமல் வேடிக்கை பார்த்து வருகிறது!
இதனால் சாலையோரங்களில் பல பல கோயில்கள் உருவாகி வருகின்றன. அரசு நிலத்தில் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்படும் கோவில்களை அகற்றாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் இந்த நிலை மாறும்!
No comments:
Post a Comment