அது என்ன ஆன்டி ஆக்சிடன்ட்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

அது என்ன ஆன்டி ஆக்சிடன்ட்?

உடல் நல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று ஆன்டி ஆக்சிடென்ட். இது உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் மற்றும் செல்களில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும். சேதமடைந்த செல்களுடன் போராட உடலுக்கு உதவுகிறது. உடலில் உள்ள நோய்களை கட்டுப்படுத்தவும் எதிர்த்துப் போராடவும் செய்கிறது.

ஆன்டி ஆக்சிடென்ட் செல்களை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதால் கேன்சர் தொடர்பான அனைத்து சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. செல்கள் தொடர்பான அனைத்து நோய்களை குணப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றது. வைட்டமின் , , சி நிறைந்துள்ள உணவுகளில், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளும்போது நமக்கு அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சி டென்ட்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

கேரட், கீரை, ப்ரக்கோலி, முட்டை, பட்டாணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி போன்றவற்றை நாம் தொடர்ந்து உட்கொள்ளும் போது நமக்கு அது அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டை தருகிறது.

No comments:

Post a Comment