கரோனாவுக்கு மருந்து: ஆய்வு செய்யும் ‘டெக் மகிந்திரா’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

கரோனாவுக்கு மருந்து: ஆய்வு செய்யும் ‘டெக் மகிந்திரா’

புதுடில்லி, ஆக.13 ’டெக் மகிந்திரா நிறுவனம், அடுத்த மூன்று அல்லது, நான்கு மாதங்களுக்குள்ளாக, கரோனாவுக்கான மருந்து பரிசோதனையை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப துறையை சேர்ந்த டெக் மகிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான, மார்க்கர்ஸ் லேப், கரோனா மருந்து தயாரிப்புக்கான காப்புரிமையை பெற விண்ணப்பித்துள்ளது.காப்புரிமை கிடைத்ததும் அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாக பரிசோதனை முயற்சியில் இறங்கும் என, இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் நிஹில் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: ரீஜின் பயோசயின்சஸ் உடன் இணைந்து, மூலக்கூறுக்கான காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்துள்ளோம். இந்த மூலக்கூறை கொண்டு, கரோனாவுக்கு மருந்து தயாரிக்க இயலும்.இன்னும் காப்புரிமை பெறப்பட வில்லை. கிடைத்ததும் பரிசோதனை முயற்சிகள் துவங்கும். மருந்தை உருவாக்கி வெளியிட, ஒன்றரை ஆண்டுகள் பிடிக்கக் கூடும். இருப்பினும், அது பரிசோதனை முயற்சிகளின் முடிவை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment