வாசிங்டன், ஆக. 2- இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென் பொருளைப் பயன்படுத்தி உலக நாடுகள் பலவற்றின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், சமூக போராளிகள் உள்ளிட்டோரின் அலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இந்தியாவிலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் அலைபேசிகள் உளவுபார்க்க இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.
இந்த நிலையில், இந்த உளவு மென்பொருளைத் தயாரிக்கும் என்.எஸ்.ஓ. குழுமம் அதிரடியில் இறங்கி உள்ளது. சில குறிப்பிட்ட நாடுகள், அரசு அமைப்புகள் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்துவதை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது. சவுதி அரேபியா, துபாய், மெக்சிகோ நாட்டின் அரசு அமைப்புகள் தடை பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக ‘தி வாசிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் வெள்ளம்
பலி 113 ஆக உயர்வு
நூரிஸ்தான், ஆக. 2- ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் மாகா ணத்தில் காம்திஷ் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 113 ஆக உயர்ந்து உள்ளது. 70 பேர் காயமடைந்து உள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
12 கி.மீ. நீளத்திற்கு சாலைகள், 173 வீடுகள் சேதம டைந்து உள்ளன என தேசிய பேரிடர் மேலாண்மைக்கான மாநில அமைச்சர் குலாம் பகாவுதீன் ஜெய்லானி கூறி யுள்ளார். இந்த சூழலிலும், தலிபான்கள் மீட்பு பணிக ளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர் என நாடாளு மன்ற உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர். எனினும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு படைகள் ஊடுருவலை தடுக்கவே செய்கிறோம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment