அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் கோரிக்கை
ஜெயங்கொண்டம், ஆக.10- அரியலூர் மாவட்ட கழக கலந்துரை யாடல் கூட்டம் 8.8.2021 ஞாயிறு காலை 10 மணியளவில் ஜெயங்கொண்டம் எழில் தங்கும் விடுதி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம் வரவேற்றார். செந்துறை ஒன்றிய செயலாளர் மு.முத்தமிழ்ச் செல்வன் கடவுள் மறுப்பு கூறினார்.
மண்டல தலைவர் இரா.கோவிந்த ராஜன், மண்டல செயலாளர் சு.மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் , பேராசிரியர் உ.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் அறிவுலக பேராசான் தந்தை பெரியார் பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டியதன் அவசியம் குறித்தும் ,இயக்கப் பொறுப்பாளர்கள் இந்த காலகட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் , தந்தை பெரியாரின் பிறந்தநாளை பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சமூக நீதி நாளாக அரசு விழாவாகக் கொண்டாட வேண்டியதன் காரணங்களையும் விளக்கி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். தீர்மானங்களை முன்மொழிந்து மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் உரையாற்றினார்.
தீர்மானங்கள்
தீர்மானம் -1 (இரங்கல் தீர்மானம்
பெரியார் பெருந்தொண்டர், சட்ட எரிப்பு வீரர் இளமைப் பருவம் முதல் இறுதிவரை கழகத் தொண்டாற்றிய கருஞ்சட்டை வீரர் -கழக மாநாடுகளில், பரப்புரைக் கூட்டங்களில் மூடநம் பிக்கை ஒழிப்புக்காக அலகு குத்தி காவடி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய சுயமரியாதைச் சுடரொளி ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கே.பி .கலியமூர்த்தி அவர்களின் மறைவிற்கும் - தந்தை பெரியாரின் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்த -கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று கழகப் பணியாற்றிய ஆலத்தூர் ஒன்றிய கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் - சுயமரியாதைச் சுடரொளி ஒய்வு பெற்ற ஆசிரியர் பெரியசாமி அவர்களின் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் -2
தமிழர்களுக்கு தன்மானம் ஊட்டிய இனமான சூரியன் அறிவாசான் தலைவர் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை அரியலூர் மாவட்டத்தில் எழுச்சியுடன் இனிப்புகள் வழங்கி, கழகக் கொடி ஏற்றி, சுவரொட்டி விளம்பரம் செய்து, வீடுகளுக்கு முன்பு படங்கள் வைத்து மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடுவதென ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம் -3
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக -பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் -4
இனமான ஏடுகள் விடுதலை ,உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ,பெரியார் பிஞ்சு ஆகியவற்றிற்கு சந்தாக்களை சேர்த்து அளிப்படுவதென முடிவு செய்யப்படுகிறது.
பங்கேற்றோர்
மாவட்ட அமைப்பாளர் இரத்தின. கு.ராமச்சந்திரன் ,மாவட்ட ப.க தலைவர் தங்க சிவமூர்த்தி,மண்டல இளைஞரணி செயலாளர் பொன். செந்தில்குமார்,மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கார்த்திக், மாவட்ட துணை செயலாளர் இல.தமிழரசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து, செயலாளர் இளவரசன், மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராசேந்திரன், ஜெயங்கொண்டம் தலைவர் மா. கருணாநிதி, செயலாளர் துரை பிரபாகரன், தா.பழூர் ஒன்றியத் தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன் ,ஒன்றிய செயலாளர்
பி .வெங்கடாசலம் ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், பெரியார் பெருந்தொண்டர்
சொ.மகாலிங்கம், உதயநத்தம் அன்புச்செல்வி, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செயலாளர் தியாக.முருகன், அமைப்பாளர் த.கு. பன்னீர்செல்வம், திருமானூர் ஒன்றிய தலைவர் க.சிற்றரசு ஒன்றிய அமைப்பாளர் சு. சேகர், செந்துறை பெரியாக்குறிச்சி ராசா செல்வக்குமார். திருமால், மீன்சுருட்டி தொழிலதிபர் ராஜா. அசோகன், ஜெயங்கொண்டம் இளைஞரணி பொறுப்பாளர் கா.பெரியார் செல்வன், செந்துறை வி.சிவசக்தி, வடலூர் இரா குணசேகரன், கலைச்செல்வி சந்திரசேகரன், தா.பழூர் ஒன்றிய இளைஞரணி தோழர்கள்
உ. விஜய், இரா.சண்முகம், வி.மாவீரன்,
கு.பிரதாப், ஜெயங்கொண்டம் நகர தலைவர் வை.செல்வராஜ், நத்தக்குழி செ.அருள், குழுமூர் கு.சுப்பராயன், கோடங்குடி இல.ரவிச்சந்திரன், ஆயிப்பாளையம் அகிலன், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
No comments:
Post a Comment