கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் - ஆட்சியர் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் - ஆட்சியர் அறிவிப்பு

கோவை, ஆக.2 கரோனா பரவலை கட்டுப்படுத்த கோவை மாவட்டத்தில் இன்று (2.8.2021)  முதல் கூடுதல் கட்டுப் பாடுகளை அறிவித்து அம் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தர விட்டுள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

கரோனாவை கட்டுப் படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வரு வதால் அரசின் வழி காட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப் படுத்த கோவை மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் மற்றும் பல்வேறு வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெற் றது. அதில் தமிழ்நாடு  அரசால் ஏற்கெனவே விதிக்கப்பட்ட கட்டுப் பாடுகளுடன் கோவை மாவட்டத்துக்கு கூடுத லாக இன்று (2.8.2021) முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள பால், மருந்தகங்கள், காய் கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கோவை மாநகராட் சியில் கிராஸ்கட் ரோடு, 100 அடிரோடு, காந்தி புரம் 5, 6 ,7-வது வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராம மூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந் திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந் தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாவட்டத் தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர் கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனு மதி வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத் தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலை யங்களுக்கு மட்டும் அனு மதி. சில்லரை விற்ப னைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள் ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட் டுள்ளது.

கேரள- _ தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனை சாவடி அமைத்து கண் காணிக்கப்படுகிறது. அந்த வழியாக வரும் வாகனங் களில் பயணிக்கும் பயணி கள் அனைவரும் கட்டாய மாக 72 மணி நேரத்திற்குள் எடுக் கப்பட்ட கரோனா பரி சோதனை சான்று அல்லது 2 தவணை தடுப் பூசி செலுத்தியதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். சான்று உள்ளவர்கள் மட்டுமே கோவை மாவட் டத்திற்குள் அனுமதிக் கப்படுவார்கள். சான்று இல்லாதவர்களுக்கு சோதனை சாவடிகளி லேயே கரோனா பரிசோ தனை மேற்கொள்ளப் படும்.

No comments:

Post a Comment