மின்கட்டணப் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்த உத்தரவு அமைச்சர் செந்தில்பாலாஜி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

மின்கட்டணப் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்த உத்தரவு அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை, ஆக.2 மின்கட்டணப் புகார் தொடர்பாகத் தனிக்கவனம் செலுத்திக் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர் மானக் கழகத் தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அனைத்து மண்டலத் தலை மைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இயக்குநர்/பகிர்மானம் எம்.செந்தில்வேல் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, பொதுமக்கள் புகார்கள் தொடர்பாக உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணப் புகார் தொடர்பாகத் தனிக்கவனம் செலுத்திக் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். முதல்-அமைச் சரின் உத்தரவின்படி வெளிப்படைத் தன்மையுடன் அனைத்துப் புகார்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்நுகர்வோரின் புகார்களைச் சரி செய்யும் போதும், மின் இணைப்பு கொடுக்கும் போதும், மின்கம்பங்கள் தேவையான பொருட்கள் ஆகியவற்றை எடுத்துவர மின் நுகர்வோரின் செலவில் வாகன வாடகை மற்றும் பணியாளர் களுக்கான ஊதியத்தையோ வாங்கக் கூடாது. இதுகுறித்துப் புகார் எழுந்தால், விழிப்புப்பணிக் குழு பார்வையிட்டு, அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

கீழமை நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு

சென்னை, ஆக.2  கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு  31.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 1,911 அலுவலக உதவி யாளர்கள், 110 சுகாதாரப் பணியாளர்கள், 496 காவலர்கள், 593 மசால்ஜி மற்றும் இரவுக் காவலர்கள், 189 துப்புரவுப் பணி யாளர்கள், 28 தோட்டக்காரர்கள் உள் ளிட்ட 3,200-க்கும் மேற்பட்ட பணியிடங் களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அதன்படி இந்த பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதனால் பெரும்பாலான விண்ணப்பதாரர் களுக்கு வெளி மாவட்டங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதில் பெரும்பாலானோர் முதுகலை பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கான எழுத்துத்தேர்வு  31.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மய்யங்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் பலர் பங்கேற்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.

No comments:

Post a Comment