ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா எதிர்ப்பு : மோடிக்கு மீண்டும் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா எதிர்ப்பு : மோடிக்கு மீண்டும் கடிதம்

புதுடில்லி, ஆக.9 ஒன் றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா வுக்கு மம்தா  கடும் எதிர்ப்பு தெரிவித்து உள் ளார். இந்த மசோதா தொடர்பான நடவடிக் கைகளை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு அவர் மீண்டும் கடிதம் எழுதி யுள்ளார்

மின்சார திருத்த மசோதா

மின்சார சட்டம் 2003-இல் திருத்தங்களை மேற்கொண்டுள்ள ஒன் றிய அரசு இது தொடர் பாக புதிய மசோதா ஒன்றை உருவாக்கி உள் ளது. கடந்த ஆண்டே தயாரிக்கப்பட்ட மின் சார (திருத்தம்) மசோதா 2020 என்ற இந்த மசோ தாவை பல்வேறு தரப் பினரும் எதிர்த்து வரு கின்றனர். குறிப்பாக புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், இந்த மின்சார சட்ட திருத்த மசோதாவையும் எதிர்த்து  குரல் கொடுத்து வருகின் றனர்.

மாநிலங்கள் எதிர்ப்பு

இதைப்போல ஒன்றிய அரசின் இந்த மசோதா, மாநிலங்களின் பல்வேறு உரிமைகளை பறிப்பதாக சில மாநில அரசுகளும் குற்றம் சாட் டியுள்ளன. இதில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா  முக்கியமானவர். இந்த மசோதாவை ரத்து செய்யுமாறு கடந்த ஆண்டே அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யிருந்தார். இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறை வேற்றுவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த மசோதா மீதான நடவடிக்கைகளை நிறுத்துமாறு மோடிக்கு மம்தா  மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்கள் விரோத அம்சங்கள்

அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் மின் சார (திருத்தம்) மசோதா 2020-அய் நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்வதற் காக ஒன்றிய அரசு புதி தாக எடுத்துள்ள முயற்சி களுக்கு மீண்டும் எனது கண்டனத்தை தெரிவிக் கும் வகையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த மசோதா கடந்த ஆண்டே தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ள மக்கள் விரோத அம்சங்களை நாங்கள் பலர் கோடிட் டுக்காட்டி இருந்தோம்.

கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும்

அதுவும் கடந்த ஆண்டு  ஜூன் 12ஆம்தேதி நான் உங்களுக்கு (மோடி)  எழுதிய கடிதத் தில் மசோதாவின் அனைத்து முக்கிய ஆபத் துகளையும் குறித்து விரிவாக விவ ரித்து இருந்தேன். குறிப் பாக நாட்டின் கூட் டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் முயற்சி இது என்பதை எடுத்துரைத்து இருந் தேன். இந்த மசோதா, மாநிலங்களின் ஒட்டு மொத்த மின்சார கட்டத்தையும், தேசிய கட்டத்துக்கு மாற்று வதை நோக்கமாக கொண் டுள்ளது.

வெளிப்படையான உரையாடல்

ஆனாலும் இந்த விவ காரத்தில் எங்கள் கவ லைகளை கருத்தில் கொள் ளாமல் மசோதாவை மீண்டும் கொண்டு வருவதை அறிந்து நான் திகைத்துப்போனேன். உண்மையில் இந்த முறை சில கடுமையான மக்கள் விரோத அம்சங்களுடன்

மசோதா உள்ளது. எனவே இந்த மசோதா மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் இந்த விடயத் தில் ஒரு வெளிப்படை யான மற்றும் பரந்த உரையாடல் ஒன்றுக்கு விரைவில் உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மம்தா  தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment