இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க அமெரிக்க எம்.பி. வலியுறுத்தல்

வாசிங்டன், ஆக. 9- உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடு களுக்கு அமெரிக்க அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள் ளார். இதன்படி பல்வேறு ஆசிய நாடுகள், ஆப்பி ரிக்க நாடுகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகளுக்கு இது வரை அமெரிக்க அரசு சார்பில் சுமார் 8 கோடிக் கும் அதிமான தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு கரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்திய அரசு சார்பில் அமெரிக்கா விற்கு தேவையான மருத் துவ உபகரணங்கள் உள் ளிட்ட பல்வேறு உதவி கள் அனுப்பி வைக்கப்பட் டன. அதே போல் இந்தி யாவில் கரோனா 2ஆவது அலையினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொள்ள, அமெரிக்க அரசு அனைத்து உதவி களையும் செய்யும் என அதிபர் ஜோ பைடன் கூறினார். அதன்படி இந்தியாவிற்கு 75 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் இந் திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடா ளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து பேசுகையில், “இந்தியாவுக்கு அமெ ரிக்கா 75 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி மருந் துகளை வழங்கியுள்ளது. இது போதாது, கூடுதலாக வழங்க வேண்டும். அமெரிக்கா உலகளவில் தடுப்பூசி திட்டத்திற்கு உதவுவதற்கான மசோதா வுக்கு 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும். இதன் வாயிலாக உலகள வில் உருவாகும் உருமா றிய புதிய கரோனா அச்சுறுத்தலை சமாளிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, வினியோ கிப்பது, தொற்று நோய் பரவலை தடுப்பது உள் ளிட்ட பல்வேறு திட்டங் களை செயல்படுத்த முடி யும்என்று அவர் கூறி யுள்ளார்

No comments:

Post a Comment