மும்பை, ஆக. 11- ஊபர் தனது வாடகை வாகன சேவையை தற்போது 39 நகரங்களில் விரிவுபடுத்தி யுள்ளது. விரிவான பாது காப்பு அம்சங்கள், வசதி யான பிக்-அப், கட்டுப் படியாகும் கட்டணம், டிஜிட்டல் பணம் செலுத் தும் முறை உள்ளிட்ட சேவைகளைப் புதிய கார் வாடகை பிரிவு வழங்கு கிறது. ஏனைய பிரபல சேவைகளில் கிடைப்ப தைப் போன்ற சிறப்பான அனுபவத்தைப் இத் தடையற்ற சேவை மூலம் பயணிகள் மற்றும் ஓட்டு னர்கள் இதிலும் பெற்று மகிழ்வர் என ஊபர் நம்பிக்கை தெரிவிக்கிறது.
அதிக வசதி, குறைந்த கட்டணம், பாதுகாப் பான பயணம் ஆகியவற் றைத் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், ஊபர் வாடகை வாகன சேவை புதிய இயல்பில் கட்டுப் படியாகும் பயணக் கட் டணத்தைத் தேர்ந்தெடுக் கும் வாய்ப்புடனான நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் பல மணி நேரத்துக்குத் தொடர்ச்சி யாக இடையிடையே பல நிறுத்தங்களுடன், சொந்த வாகனம் போல் பயன் படுத்திக் கொள்ளலாம்.
இது குறித்து ஊபர் இந்தியா அண்ட் தெற்கு ஆசியா, ரைடர் ஆபரே ஷன்ஸ், தலைவர், ரடுல் கோஷ் கூறுகையில், ‘39 நகரங்களுக்கு இச்சேவை யின் விரிவாக்கமும், மாதா மாதம் ஊபர் ரெண்டல்ஸ் பெறும் வளர்ச்சியும், பயணிகளின் தேவை களை இச்சேவை எவ் வாறு நிறைவு செய்கிறது என்பதற்குச் சாட்சியாக விளங்குகிறது. எங்களது ஓட்டுனர்களுக்கு இந்தச் சலுகை வருமானம் ஈட்ட மற்றுமொரு வாய்ப்பைத் தருகிறது’ என்றார்.
No comments:
Post a Comment