வில்லியனூர் கொம்யூன் திராவிடர் கழகத் தலைவரும், புதுச்சேரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி தலைவர் தி.இராசா அவர்களின் தந்தையாருமான “பெரியார் பெருந் தொண்டர் கரு.சி.திராவிடச் செல்வன் அவர்கள் உடல் நலமின்மை காரணமாக 8.8.2021 அன்று பகல் 3 மணியளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
கடந்த 1 மாத காலமாக ஜிப்மரில் சிகிச்சை பெற்ற நிலை யில் சிகிச்சை பலன் அளிக்காமல் மறைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் இருந்த கரு.சி.திராவிடச் செல்வன் அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தபோது எல்லாம் சரியாகிவிடும் என்றும் கருப்பு சட்டைக்காரன் எதைக் கண்டும் பயப்படமாட்டான் என்றும் கூறினார். அவரது இழப்பு புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்திற்கு பேரிழப்பு ஆகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கெள்கிறோம். ஏற்கெனவே தாம் இறந்தவுடன் ஜிப்மர் மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பதற்கு பதிவு செய்திருந்தும் கரோனா காரணமாக செயல்படுத்த முடியவில்லை. தந்தை பெரியார் காலந் தொட்டு இயக்கப் பணியில் சிறப்பாகப் பயணித்தவர். தமிழர் தலைவரின் பால் அதிக அன்பு கொண்டவர். கழகம் நடத் திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். பல்வேறு போராட்டங்களில் சிறையேகியவர். இயக்க மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் பிரச்சாரப் பணிகளுக்கு தாராளமாக பொருளுதவி செய்தவர். கழகத்தில் பலரையும் ஈர்த்து களப்பணிக்கு சேர்த்தவர் என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. தனது குடும்பத்தையே இயக்கப்பணி செய்ய வைத்த பெருமைக்குரியவர். தந்தையை இழந்து வாடும் அவரது மகன் தி.இராசா, மகள் தி.பகுத்தறிவு, தி.அறிவழகி, அவரது துணைவியார் விஜயா, திராவிடச்செல்வன் ஆகி யோருக்கு புதுச்சேரி மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். அய்யா திராவிடச் செல்வனுக்கு கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத்து கிறோம்.
பின்குறிப்பு: பெண்ணாடம் சிறுபாக்கம் பகுதி கிளைக் கழகத்தில் இணைந்து கழகக் களப்பணியில் தீவிரமாக செயல்பட்ட மாபெரும் கழகச் செயல் வீரர் என்பதும், வில் லியம் ஷேக்ஸ்பியர் என்ற தனது பெயரை திராவிடச் செல்வன் என பெயர் மாற்றம் செய்து மற்றவர்களுக்கு திராவிடச் சிந்தனையை தூண்டியவர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
- சிவ.வீரமணி
மாநில தலைவர், புதுச்சேரி
திராவிடர் கழகம்
புதுச்சேரி
9.8.2021
No comments:
Post a Comment