புனே, ஆக.3 கரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை யில் இருந்து மீளாத கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு பரவியது.
நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு முதன்முறையாக குஜராத் தின் ஆமதாபாத் நகரில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட் டது. பகல் பொழுதில் ஏடிஸ் வகை கொசுவால் கடிக்கப்படும் மனித ருக்கு இதன் பாதிப்பு தென்படும்.
இதற்கிடையே, கரோனா பாதிப்பின் 2ஆவது அலையில் இருந்து மீளாத கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு பரவியது.
இதில், திருவனந்தபுரத்தில் 14 வயது சிறுமி மற்றும் புத்தன்தோப்பு பகுதியில் 24 வயது இளம்பெண் என 2 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த ஜிகா வைரசின் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மகாராட்டிராவிலும் ஜிகா வைரஸ் பாதிப்பு பரவி யுள்ளது.
மகராட்டிரா மாநிலம் புனே வில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அவரின் மாதிரிகளை பரிசோ தித்ததில் ஜிகா பாதிப்புடன், சிக்குன்குனியா வைரசாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகா தாரத் துறை தெரிவித்துள்ளது. அவருக்கும், அவரது குடும்பத் தினருக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. அவர் முழுமை யாக குணமடைந்து விட்டார் என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரசால் பாதிக்கப் பட்டவர்கள் பலருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது
No comments:
Post a Comment