தமிழ்நாடு முதலமைச்சருடன் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினர் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

தமிழ்நாடு முதலமைச்சருடன் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பினர் சந்திப்பு

சென்னை, ஆக.10- அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி வெளி யிட்டுள்ள செய்திக்  குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

நமது அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேற்று (9.8.2021) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்தோம்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இப்பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்ததுடன்,  நீதிமன்றத்திலும் திறம் பட எடுத்துரைத்து, ஓபிசி பிரிவினர்க்கு 27 இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்தமைக்கு, நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பின் சார்பில்  முதலமைச்சர் அவர் களுக்கு நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நல சங்க கூட்டமைப்பின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டோம்.

ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட் டோர்க்கான முக்கிய கோரிக்கை களை நிறைவேற்றிட ஒன்றிய அரசை வலியுறுத்திட வேண்டும் என   முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.

1.  2021இல் ஜாதிவாரி கணக்கெ டுப்பு ஒன்றிய அரசு நடத்திட வேண்டும்.

2. இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பின ரில் கிரிமிலேயர் பிரிவினர் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும்

3. அரசுடைமையாக்கப்பட்ட ஒன்றிய அரசு வங்கிகளில் தமிழ்நாடு இளைஞர்க ளுக்குப் பறி போகும் வேலை வாய்ப்புகள்.

4. அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நியமனத்தில் ஓபிசி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படவில்லை.

5. நாகையில் சிபிசிஎல் நிறுவனம் 50 சதவீத தனியார் முதலீட்டில் துவக்கப்பட் டாலும், இட ஒதுக்கீடும், உள்ளூர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

No comments:

Post a Comment