கோவாகால்கோ, ஆக. 10- மெக்சிகோ நாட்டில் 20 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள் 'டெல்டா' வகை தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக தக வல் வெளியாகி உள்ளது.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் மொத்த முள்ள 12.60 கோடி மக் கள் தொகையில் அய்ந்து கோடி பேர் இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட் டுள்ளனர். 2.70 கோடி பேர் ஒரு டோஸ் போட் டுள்ளனர். அந்நாட்டில் 30 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டனர். 2.44 லட்சம் உயி ரிழப்புகள் பதிவாகி உள் ளது. கரோனா உயிரிழப்பு அதிகமுள்ள நாடுகளில் மெக்சிகோ நான்காவது இடத்தில் உள்ளது. மெக் சிகோவில் 20 வயதுகளில் உள்ள இளைஞர்கள் கரோனா தொற்றுக்கு தற் போது ஆளாகி வருகின் றனர்.
மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று மீளக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிக வீரியம் உடைய 'டெல்டா' வகை தொற்றால் இளை ஞர்கள் பாதிக்கப்படுவ தாக தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்க அரசு தயங்குவதா லும், தனிமனித இடை வெளி, மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது போன்ற நட வடிக்கைகள் எடுக்காத தாலும், தொற்று அதிக ரிப்பதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment