மகளிரால் மகளிருக்காக மகளிரைக் கொண்டே நடத்தப்பட்ட மகத்தான மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

மகளிரால் மகளிருக்காக மகளிரைக் கொண்டே நடத்தப்பட்ட மகத்தான மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா!

 இரண்டாம் நாள் (வகுப்பு - 3 மற்றும் வகுப்பு - 4)

சென்னை, ஆக. 13-  பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 3, வகுப்பு - 4 ஆகிய இரண்டு வகுப்புகளின் நிறைவு விழா 1.8.2021 அன்று நடை பெற்றது.

மாலை 6.00 மணி அளவில் தொடங்கிய இரண்டாம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சியில் கழக மகளிரணியின் மாநில அமைப்பாளர் .தேன்மொழி வரவேற்புரையாற்றினார். வரவேற் புரையின் போது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் நம் சீனிவாசன், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள், அமைப்பாளர், கழகத்தின் மற்ற பொறுப்பாளர்கள், பயிற்சி வகுப்பின் மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள், பயிற்சி மாணவர்கள், மகளிரணி, மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் இணையத்தில் இணைந்திருந்த அனைத்து இயக்க குடும்பத்தினர் என்று அனைவரையும் குறிப்பிட்டு வரவேற்றார்.

திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார்.

துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி

இந்த இரண்டாம் நாள் நிறைவு விழா நிகழ்ச்சிக்கும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி தலைமை வகித்தார். தன்னுடைய தலைமை உரையில் அவர் குறிப்பிட்டவை:

தந்தை பெரியார் அவர்கள் 1943ஆம் ஆண்டு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “நான் பொதுவாழ்வில் இருந்து விலகி பத்தியமாய் இருந்தாலொழிய இன்னும் 4, 5 வருஷத்துக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால், ஒரு வேலையும் செய்யாமல் உயிருடன் இருப்பதைவிட பிடித்த வேலையைச் செய்துகொண்டு சாவதே மேல் என்று நினைத்தே வேலை செய்கிறேன். என் உடலில் ஓர் உறுப்பு வீங்குவதைத் தெரிந்துக் கொண்டே பேசுகிறேன். இந்த இயக்கம் என் சொந்த சொத்து. இதில் எனக்கு மேல் அதிக பொறுப்பு கொண்டவர்கள் யாரும் இல்லை. எனவே, நம் இலட்சியத்தை அடைய அதிக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது இயல்பு தானேஎன்று மிகவும் உடல் வேதனையுடனும், உள்ள வேதனையுடனும் கூறுகிறார். அப்படி இன்னும் 4,5 ஆண்டுகளே வாழ முடியும் என்று கூறியவரை அதற்குப் பிறகு 30 ஆண்டுகள், 1973 வரை நம்மோடு வாழவைத்தவர் அன்னை மணியம்மையார். அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்கள் காலை - மாலைகளில் பொதுக் கூட்டங்களில் பேசிவிட்டு இரவு தான் பேசியதை தானே எழுதி 'குடிஅரசு' இதழில் அச்சிட்டு அந்தப் புத்தகங்களை விற்க நேரமின்றி வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இப்படி அய்ந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வீட்டில் தேங்கிக் கிடந்தன. அந்தப் புத்தகங்களையும் அன்னை மணியம்மையார் அவர்கள் சுமந்துச் சென்று அய்யா பேசிய கூட்டங்களிலெல்லாம் ஒரு மூலையில் கடைவிரித்து சிறிது சிறிதாக அத்தனை புத்தகங்களையும் விற்றுவிட்டார். இப்படி தந்தை பெரியார் அவர்களுக்குப் பல காரியங்களிலும் உறுதுணையாக இருந்து அவரை மேலும் 30 ஆண்டுகள் நம்மோடு வாழவைத்த மணியம்மையார் ஒரு பெண். “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?” என்று கேட்ட காலகட்டத்தில் அந்தப் பெண் களின் கைகளிலிருந்துக் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகத்தைக் கொடுத்தவர் தந்தை பெரியார். அதன் விளைவு - தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பிறக்கவே இல்லாத இந்த இளம் தலைமுறை இன்று அவரைத் தேடித்தேடி படிக்கிறார்கள். இது தந்தைபெரியார் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி, அவரது கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி.  இன்னும் இரண்டு ஆண்டுகள் கழிந்தால் தந்தை பெரியார் அவர்கள் மறைந்து அரை நூற்றாண்டு முடியப் போகிறது. இதில் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்திற்குத் தலைமை ஏற்றிருந்த ஒரு 5 ஆண்டு காலம் தவிர, மற்ற 43 ஆண்டுகளுக்கும் மேலாக கழகத்தை வழிநடத்தி நம்மை எல்லாம் தந்தை பெரியார் அவர்களின் பாதையில் எந்தவித சபலங்களுக்கும் ஆளாகாமல் வழி நடத்தி, தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி, தந்தை பெரியாரை உலக மயமாக்கிக் கொண்டிருப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். இன்றும் தமிழ்நாட்டின் அரசியல் தந்தைபெரியாரைச் சுற்றியும் அவர் கொள்கைகளைச் சுற்றியும் தான் நடக்கிறது. இது ஆசிரியர் அவர்களுக்குக் கிடைத்த வெற்றி. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான் இந்தப் பயிற்சி வகுப்பினை நடத்தும் நல்லதொரு வாய்ப்பினை எங்களுக்கு அளித்தார்கள். அதற்காக அவர்களுக்கு மகளிர் பொறுப்பாளர்கள் அனைவரின் சார்பிலும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வகுப்புகள் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் நம்.சீனிவாசன், சிறப்பான பரிசுத்தொகைகளை அறிவித்து மாண வர்களுக்கு உற்சாகமூட்டிய பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன், பொருளாளர் அருள்செல்வி ஆகியோருக்கும்,  இந்நிகழ்ச்சிக்குப் பக்கபலமாக இருந்து எங்களை வழிநடத்திய கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கு ரைஞர் .அருள்மொழி, என்னோடு நேரடியாக இப்பணியில் இணைந்துச் செயல்பட்ட மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் .தேன்மொழி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, எங்களுக்கு இதற்கான வழிமுறைகளைக் கூறி வழிகாட்டிய பொதுச்செயலா ளர்கள், மாநில அமைப்பாளர், அனைத்து மகளிர் பொறுப் பாளர்கள், சிறப்பாக வகுப்பெடுத்த ஆசிரியர்கள், எல்லாவற் றிற்கும் மேலாக தினமும் வகுப்புகளில் இணைந்து, தேர்வும் எழுதி, இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற முக்கிய பங்காற்றிய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைமை உரையை நிறைவு செய்தார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மை

பெரியாரியல் பயிற்சி வகுப்பு - 3இன் தலைமை ஒருங் கிணைப்பாளர் மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணி யம்மை வாசித்தளித்த பயிற்சி வகுப்பின் அறிக்கை:

சென்னை, திருவாரூர், காரைக்கால், மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் அரியலூர் மண்டலங்கள் அடங்கிய பிரிவு - 3 இல் மொத்தம் பதிவு செய்தவர்கள் 105 பேர். மாநில இளை ஞரணி நடத்திய பயிற்சி வகுப்பில் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போனதால், அந்த 27 மகளிருக்கும் இந்தக் குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டது. இவர் களையும் சேர்த்து குழுவில் இடம் பெற்றவர்கள் மொத்தம் 132 பேர்.  அவர்களில் பத்து நாள்களும் சராசரியாக 55 பேர் வகுப்பில் கலந்துகொண்டனர், எண்பது விழுக்காட்டிற்கும் மேல் வருகைப் பதிவு செய்தவர்கள் 47 பேர், தேர்வு எழுதியவர்கள் 40 பேர்.

பொதுத்தொண்டு செய்பவனுக்கு ஏற்படும் தொல்லை தான் அவன் தன் லட்சியத்திற்குக் கொடுக்கும் விலைஎன்ற எழுச்சியான பொன்மொழியோடு தொடங்கியது முதல் நாள் வகுப்பு! முத்தான பொன்மொழிகளை நாள்தோறும்  விருப்பத் தோடு கூறிய பத்து மகளிர் பயிற்சியாளர்கள் - எம்.கே.பவ தாரிணி, எம்.கலைச்செல்வி, வி.விஷாலி, எஸ்.யாழினி, எஸ்.ரேவதி, சூர்யா ராஜகோபால், .ரேவதி, தேன்மொழி பிரபா கரன், எஸ்.அறிவுச் செல்வி மற்றும் முனைவர் ஞா.கயல்விழி.

பத்து நாள்கள் பத்து ஆசிரியர்களால் சிறப்பாக எடுக்கப்பட்ட வகுப்புகளின் முன்னோடியாக அமைந்ததுதந்தைபெரியார் ஓர் அறிமுகம்என்ற தலைப்பில் கழகத் துணைத்தலைவர் கவிஞர் அவர்களின் வகுப்பாகும். பத்து தலைப்புகளில் வகுப் பெடுத்த ஆசிரியர்களைக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி, திராவிட மகளிர் பாசறை செயலாளர்

பா.மணியம்மை ஆகியோர் மாணவர்களுக்கு அடுத்தடுத்து அறிமுகம் செய்து வைத்தனர்.

வகுப்பாசிரியர் எடுத்த பாடத்தின் அடிப்படையில் தினந்தோறும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான சரியான விடையை முதலாவதாகச் சொல்லும் ஒரு மாணவருக்கு ரூ.100/- பரிசு, கூகுள்பே மூலம் அனுப்பப்பட்டு, குழுவில் புகைப்படம் போடப்பட்டது. இந்த பரிசுத்தொகையைக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி வழங்கினார்.

பரிசு பெற்ற பத்து பேர்

1) எஸ்.திவ்யா 2) பி.எஸ்.கிரிஜா 3) ஆர்.புவனேசுவரி

4) பி.ஆனந்தி 5) .நித்யா 6) வி.விஷாலி 7) எஸ்.புவனேசுவரி 8) எஸ்.அறிவுச்செல்வி 9) சூர்யா ராஜகோபால் 10) எஸ்.எஸ்.பிரியதர்ஷினி

ஒவ்வொரு நாளும் வகுப்பு ஆசிரியர்கள் எடுத்த பாடங் களில் வகுப்பின் முடிவில் மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளில் சிறந்த ஒரு கேள்விக்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது,

கழகத் துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி மூலம் பரிசு பெறுபவர்கள்:

1) மித்ரா 2) கிரிஜா 3) முத்து கவுசல்யா 4) கோடீஸ்வரி 5) யாழினி 6) பா. ஆனந்தி 7) ரேவதி 8) சங்கரேஸ்வரி 9)  ரத்னா தீபக் 10) பா. ஆனந்தி

அனைத்துக் கேள்விகளும் சிறப்பாக இருந்தாலும், குறிப் பிடத்தக்கவை - முத்துகவுசல்யா என்ற மாணவி எழுப்பிய பஞ்சமன், சூத்திரன் என்றால் யார்?. ‘தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் பணிகள்என்ற தலைப்பில் வகுப்பெடுத்த

பா. மணியம்மை இதற்கான பதிலை வழங்கினார். மற்றொரு கேள்வி பா. ஆனந்தி எழுப்பியபள்ளிகூட மொழிப்பாடங்களில் தான் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பாடங்கள் இடம்பெற்றுள்ளன - குறிப்பாக ராமாயணம், பெரியபுராணம், சீறாப்புராணம். இவற்றை நீக்கினால் என்ன?’ - என்பது. இதற்கான விடையைதந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்என்ற தலைப்பில் வகுப்பெடுத்த கோ. செந்தமிழ்ச்செல்வி அளித்தார்.

தினந்தோறும் வகுப்பில் பெண்கள் எழுச்சி பாடல்களைப்  பாடி தன் தனித்திறனை வெளிப்படுத்திய ரத்னா தீபக்கிற்கு ரூ.200/- பரிசுத்தொகையைக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் .இன்பக்கனி வழங்கினார்.

தொடர்ந்து, வழக்குரைஞர் பா.மணியம்மை இந்நிகழ்ச்சிக்குத் தங்கள் ஒத்துழைப்பை வழங்கிய பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, காணொலி இணைப்புக்கு நிதி வழங்கிய மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ஒவ்வொரு நாளும் வகுப்பிற்கான அழகான அழைப்பிதழை இணையத்தில் பதிவிட்ட வேலூர் மாவட்ட தலைவர் வி..சிவக்குமார், தினந்தோறும்  இணைப்புரை வழங்கி நிகழ்வை சிறப்பித்த பெரியார் களம் இறைவி, இணையத்தின் மூலம் அனைவரையும் இணைத்த திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கு பிரிவு வாரியாக ரூ.10000/- மற்றும் ரூ.5000/-பரிசு தொகையை அறிவித்து, ஒரு நாள் வகுப்பில் பங்கேற்று, தந்தை பெரியாரைப் போல் பேசிக் காட்டி, தந்தை பெரியாரைப் பார்த்திராத இளைய தலைமுறை யினருக்கு மகிழ்ச்சி அளித்த பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன், பல வகுப்புகளில் பங்கேற்று ஊக்கமளித்த  மருத்துவர் மீனாம்பாள் ஆகி யோருக்கும் நன்றி தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தனித்தன்மைகள் பற்றி வகுப்பெடுத்தது மட்டுமின்றி, இந்த மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற பத்து தலைப்பு களையும், அவற்றிற்கான ஆசிரியர்களையும் தேர்வு செய்து பயிற்சி வகுப்புகள் நான்கு குழுக்களாக நடைபெற பெரிதும் உதவிய பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநர் முனைவர் நம்.சீனிவாசன், தேர்வு நேரத்தின்போது மாதிரி மின்னஞ்சல் அனுப்புவதில் தொடங்கி அத்தனை உதவி களையும் செய்த பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் இளங்கோவன் ஆகியோருக்கும் நன்றி தெரி வித்தார்.

தொடர்ந்து, பெண்களால் பெண்களுக்காகப் பெண்களைக் கொண்டே  நடத்தப்பட்ட இந்த மகளிர் பெரியாரியல் வகுப் புக்கான ஏற்பாடுகளை, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் வழியாக திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை தோழர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தன் அறிக்கையை முடித்தார்.

திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி

கோவை, ஈரோடு, தஞ்சை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய அய்ந்து மண்டலங்களில் 19.7.2021 முதல் 29.7.2021 வரை நடைபெற்ற பயிற்சி வகுப்பு - 4இன் அறிக்கையை வாசித்தளித்த திராவிட மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி  குறிப்பிட்டதாவது:

பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னால், காணொலியில் இணைவது எப்படி, பதிவு எண் இடுவது எப்படி, பெயரினை எழுதுவது எப்படி என்று பயிற்சிக்குப் பதிவு செய்யப்பட்ட மகளிர்க்கு ஆரம்ப கட்ட பயிற்சியினை வழங்கி னோம். வகுப்பு தொடங்கிய நாள் முதல் பொன்மொழிகள், அறி முகவுரை, நன்றியுரை என்று பதிவு செய்த மகளிர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 83 மகளிர் வகுப்புக்கு பதிவு செய்தனர், அதில் சராசரியாக வகுப்புக்கு வந்தவர்கள் எண்ணிக்கை-53, 80 விழுக்காடு: வருகைப்பதிவுடன் தேர்வு எழுதியவர்கள் எண் ணிக்கை 47. பயிற்சி பெறும் மகளிரின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் ஒவ்வொரு நாள் எடுக்கப்படும் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு சரியான விடையை முதலில் பதிவு செய்யும் மகளிர்க்கு ரூ.100 பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசினை மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்

சே.மெ.மதிவதனி வழங்கினார்.

அவ்வாறு பரிசு பெற்றவர்கள்:

1) தில்லைக்கரசி 2) ரா.ரம்யா 3) இனியா 4) அருணா 5) சிறீதேவி 6) பரமேசுவரி 7) வீரசக்தி 8) கல்பனா ராணி 9) நந்தினி 10) .ரம்யா

மகளிர் அனைவருக்கும் ஒரு தனித்திறன் இருக்கும். அதனை வெளிப்படுத்தத் தடைகள் நிறைய இருக்கும். அதை எல்லாம் தாண்டி மகளிர் தங்களின் தனித்திறன் வெளிப்படுத்த தினமும் வகுப்பு முடிந்ததும் 3 நிமிடங்கள் வாய்ப்பு வழங்கப் பட்டது. கவிதை, பாடல், பேச்சு என்று தங்கள் தனித்திறனை வெளிப்படுத்திய மகளிருக்குபெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலினை பரிசளித்தோம். அப்பரிசினை அமெரிக்க வாழ் பெரியாரிய சிந்தனையாளர் இளமாறன் வழங்கினார்.

தனித்திறன் வெளிப்படுத்தி பரிசு பெற்றவர்கள்:

1) சரண்யா 2) ரம்யா 3) சிறீதேவி 4) ரேவதி 5) ராதா

6) மாரியம்மாள் 7) நந்தினி 8) புனிதா 9) கல்பனா ராணி

பயிற்சி மாணவிகள் வகுப்பை எப்படி உள்வாங்கி உள் ளார்கள் என்பதை கண்டறிய, தினமும் நடத்தப்படும் பாடத்தை பற்றிய தங்கள் கருத்தை சிறப்பாக பதிவு செய்யும் ஒருவருக்கு ரூ.100 பரிசு வழங்கப்பட்டது. அதற்கான பரிசுத்தொகை ரூ.500அய் கோவை மண்டல  மகளிரணி செயலாளர் .கலைச் செல்வி வழங்கினார்.

வகுப்பைப் பற்றிய கருத்துகள் எழுதி பரிசு பெற்றவர்கள்:

1) சரண்யா 2) மாரியம்மாள் 3) .ரம்யா 4) தில்லைக்கரசி

5) பரமேசுவரி

வகுப்பை நடத்த மிக முக்கிய தேவையான காணொலி இணைப்பிற்கானக் கட்டணம் செலுத்தி, அதைப் பயன்படுத்த தந்தவர் கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர். தினமும் வகுப்பு தலைப்பு, வகுப்பாசிரியர் பெயர் ஆகியவற்றை உள்ளடக்கிய அழைப்பு ஏற்பாடு செய்து தந்தவர்கள் மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர் பிரவீன் மற்றும் தஞ்சை பொ..பகுத்தறிவு. அனைத்து நிலையிலும் வகுப்பு சிறப்பாக நடக்க ஒருங்கிணைப்பு உதவி நல்கியவர்கள் குழுவின் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள்:

1) .கலைச்செல்வி (தஞ்சை மண்டல  மகளிரணி செயலாளர்)

2) .கலைச்செல்வி (கோவை மண்டல  மகளிரணி செயலாளர்)

3) சே.மணிமேகலை (சிவகங்கை, பொதுக்குழு உறுப்பினர்)

4) பா.திலகவதி (ஈரோடு மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

5) .தில்ரேஷ் (சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர்)

6) பொ..பகுத்தறிவு (தஞ்சாவூர்)

காணொலி இணைப்பில் தினமும் இணைந்து, காணொலி இயக்க ஒத்துழைப்பு வழங்கியவர் காரைக்குடி மாவட்ட செயலாளர் .கு.வைகறை. இணைப்புரை வழங்கி பயிற்சியை நெறிப்படுத்தியவர்கள் சே.மெ.மதிவதனி, பொ..பகுத்தறிவு, மேட்டுப்பாளையம் ரா.அன்புமதி என்று கூறி, அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தன் அறிக்கையை முடித்தார்.

தொடர்ந்து பயிற்சி வகுப்பு - 3அய்ச் சார்ந்த ரேவதி (சென்னை மண்டலம்), சூர்யா ராஜகோபால் (விழுப்புரம் மண்டலம்), இதழ்மொழி (திருவாரூர் மண்டலம்), நித்யா (புதுக்கோட்டை); பயிற்சி வகுப்பு - 4அய்ச் சார்ந்த பகுத்தறிவு (தஞ்சாவூர்), .ரேவதி (திண்டுக்கல்), சங்கீதா (சிவகங்கை) மற்றும் பாண்டிச்செல்வி (கோவை) ஆகிய மாணவர்கள் பயிற்சி வகுப்பு களையும், ஆசிரியர்களைப் பற்றியும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

பேராசிரியர் நம். சீனிவாசன்

இதனைத் தொடர்ந்து, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் இயக்குநரும், இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு ஓர் அடிப்படை காரணமுமாக விளங்கிய பேராசிரியர் நம். சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். தன் உரையில், தந்தை பெரியார் என்ற பெயர் அனைவரும் அறிந்ததே, அவருக்குப்பெரியார்என்ற பட்டத்தை வழங்கியதே பெண்கள் அமைப்பு தான். பெரியாரியல் பயிற்சி வகுப்பு மகளிருக்கு அவசியம் தேவை. பாதுகாப்பற்ற இக்கரோனா சூழ்நிலையில், மிகப் பாதுகாப்பான ஒருதடுப்பூசியைப் போன்றது பயிற்சி வகுப்பு என்று குறிப்பிட்டார்.

இந்தப் பயிற்சி வகுப்பில் தஞ்சை, கோவை, ஈரோடு, சிவகங்கை, திண்டுக்கல், சென்னை, திருவாரூர், காரைக்கால், மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் மற்றும் அரியலூர் ஆகிய 12 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்களின் விவரம்:

மொத்தம் பதிவு செய்தவர்கள்    -   188

அதில், கல்லூரி மாணவர்கள். -   145

பள்ளி மாணவர்கள்.   - 43

முனைவர் பட்டம் பெற்றோர்   - 2

அதில், திராவிடர் கழகம் சார்ந்தவர்கள்  -   63

பொதுவானவர்கள்.  -  125

தேர்வு எழுதியவர்கள் -   87

நூற்றுக்கு நூறு எடுத்தவர்கள்  -    2

பயிற்சி வகுப்பு - 3 இல் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆர்.லைலா (BA - Tourism & Travel Management) என்ற மாணவரும்; திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெ.கிருத்திகா (B.Tech - IT) என்ற மாணவரும் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்று கூறி, பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்ற அனைத்து மகளிருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வழக்குரைஞர் .அருள்மொழி

இதனைத் தொடர்ந்து, கழகப் பிரசாரச் செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி பேசும்பொழுது, இவ்வளவு மகளிர் தோழர்களை பல்வேறு மண்டலங்களிலிருந்து ஒருங் கிணைத்து, சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் கழகத் துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைத்து மாநில மகளிர் பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துகளையும், அவர்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எப்பொழுதும் ஆண்களை விட மகளிருக்கு அதிக பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துவார். மாணவர்கள் என்பது இருபால் தோழர்களையும் குறிக்கும் ஒரு பொதுவான சொல் - இதைப் பற்றி அடுத்த பயிற்சி வகுப்பில் அறியலாம் என்று கூறியவர், மாணவர்களை நேராக ஒருங்கிணைப்பதைக் காட் டிலும் மிகவும் சிறப்பாக இக்காணொலி வகுப்புகளில் இணைத் திருக்கிறார்கள். மாணவர்களும் இந்நல் வாய்ப்பினைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பயிற்சியாளர்கள் சார்பில் வாழ்த்து களைத் தெரிவித்தார், பயிற்சியாளர்களும் பல புத்தகங்களைப் படித்து இன்றைய மாணவர்களின் ஆர்வத்திற்கு ஈடுகொடுக்க தங்களை upto date ஆக வைத்துக் கொள்ள வேண்டும். முந்தைய நாள் விழாவில் கைக்குழந்தையுடன் ஒரு மாணவர் பயிற்சி பெற்றார் என்று அறிந்தேன், இன்று, மேலும் இருவர் சிறு குழந்தைகளுடன் பங்கேற்றதை அறிந்தேன். இவர்கள் மூவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், அது பரிசு பெறும் அளவிற்கு இல்லாததால், என் சார்பில் மூவருக்கும் ரூ.1000/- வீதம் அளிக்கிறேன் என்று கூறி, அந்த மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அவருக்கு மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

அருள்செல்வி பாலகுரு உரை

அதனைத் தொடர்ந்து பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பொருளாளரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், தமிழர் தலைவர் அவர்களின் அருமை மகளுமாகிய அருள்செல்வி பாலகுரு அவர்கள் நிறைவு விழாவில் பங்கேற்று தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இயக்கத்திற்கு அப் பாற்பட்ட மகளிரையும் இணைத்து, பெரியாரியல் வகுப்புகளை மிகச் சிறப்பாக நடத்தி இருக்கும் மகளிர் பொறுப்பாளர்கள் அனைவருக்கும், மற்றும் கற்பிக்கப்பட்ட பெரியாரியலை திறம்பட உள்வாங்கி, தங்கள் எண்ணங்களையும், கருத்து களையும் தைரியமாக இங்கு பதிவு செய்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தவிர, தமிழ் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் அவரைப் போன்றோருக்கு மகளிரின் இந்த வளர்ச்சி மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிப்ப தாகக் கூறியது மட்டுமின்றி, மகளிர் பொறுப்பாளர்களின், மாணவச் செல்வங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பெரியார் பன்னாட்டு மய்யம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி யளித்தார்.

அவருக்கும், பெரியார் பன்னாட்டு மய்யத்திற்கும் மகளிர் பொறுப்பாளர்களின் சார்பில் தகடூர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

கழகத் துணைத்தலைவர் உரை

அடுத்து உரையாற்றிய கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது,  இதற்காக உழைத்த மகளிர் பொறுப்பாளர்களுக்கும், பயிற்சி பெற்ற மாணவச் செல்வங் களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தவிர, தன்னுடைய வாழ்த்துரையில், நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதி இருக்கும் மகளிரால் மட்டுமே இத்தகையப் பகுத்தறிவுக் கருத்துகளை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். ஆசிரியர் அவர்கள் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் அளித்து தொடங்கப்பட்ட மகளிர் பிரிவு, இன்று தமிழ் நாடு முழுவதும் மகளிரணியாகவும் மகளிர் பாசறையாகவும் காலூன்றி பரவி இருப்பது ஒரு சிறந்த அத்தியாயம். ஏராளமான மகளிர் இன்று மேடைப் பேச்சாளர்களாகவும் களப்பணியாளர்களாகவும், ஆண் தோழர்களின் உதவியின்றி தங்களால் செயல்படுத்த முடியும் என்று நம்பிக்கையோடு வருவது கழக வரலாற்றில் ஒரு மைல்கல். மற்ற அரசியல் அமைப்புகளில் அவர்களின் கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்வது ஒரு பகுதி நேர வேலை தான் (part time job). திராவிடர் கழகத்தில் மட்டுமே அதன் கொள்கைகளை தங்கள் வாழ்க்கையின் நெறியாகக் கொண்டிருக்கும் தொண்டர்கள், அக்கொள்கை களைத் திட்டமிட்டு மக்களிடையே கொண்டு செல்லும் தொண்டர்கள் உள்ளனர்.

தந்தை பெரியாரின், திராவிடர் இயக்கத்தின் முக்கிய கொள்கை - ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு - இவையே நமது கண்கள் - இவற்றப் பரப்ப மகளிர் முன்வருவது பாராட்டுதலுக்குரியது. ஆனால், இன்றும் இந்திய அளவிலும், உலக அளவிலும் நடக்கும் பெண்கள் மாநாடுகளில் நமது இயக்க மகளிர் அழைக்கப்படுவதில்லை. பெரும்பாலும் பார்ப்பன பெண்களே அழைக்கப்படுகின்றனர். அண்ணல் அம்பேத்கர் அன்றே கூறினார் - “சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால், அதை பார்ப்பன, உயர்ஜாதி ஹிந்துப் பெண்களே அனுபவிப்பர்” - என்று. இதை நம் மகளிர் முறியடிக்க வேண்டும். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் திருமண மேடைகளைக் கொள்கை பரப்பும் மறுமலர்ச்சி மேடைகளாகப் பயன்படுத்தினார். அதன் விளைவு தான் இன்று பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். மாநில, ஒன்றிய அரசுகளும் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம், விவாகரத்து, மறுமணம், விதவைத் திருமணம் என்று பல உரிமைகளைச் சட்டமாக்கி உள்ளனர் என்றும் எடுத்துரைத்தார்.

தெருவுக்குத் தெரு கருத்தரிக்கும் மய்யங்கள் உருவாகியுள்ள இக்கால கட்டத்தில், ‘இந்து தமிழ் திசைஇதழில் வெளியான ஒரு பெண் வாசகரின் கடிதத்தைப் பற்றியும் கவிஞர் அவர்கள் குறிப்பிட்டார். அதில் அப்பெண்மணி, மணமகன் தேடும் விளம்பரங்களில், ‘குழந்தைகள் பெறுவதில் ஆர்வமில்லை, குழந்தைப் பேற்றைத் தள்ளி போடும் எண்ணம் உள்ளது, இதே எண்ணம் கொண்ட ஆண்கள் தேவைஎன்று இனி பெண்கள் குறிப்பிட வேண்டும் என்று எழுதி உள்ளார். உரிமைகள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுதானே! இக்கடிதம் தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் உயிரோட்டம் பெற்றிருப்பதைப் பறைசாற்றுகின்றன. இனி இயக்க மகளிரின் முக்கிய பணி பெரியாரியலைப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்காத மகளிரிடம் கொண்டு சேர்ப்பதே. அப்போது தான் ஒட்டுமொத்த மகளிரிடையே, மாணவர்களிடையே மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படும். தந்தை பெரியார் அவர்கள் புறக்கணிக்கப்பட்டாலும் அவருடைய கொள்கைகள் வெற்றி பெறும் - அவற்றைப் புறக்கணிக்க முடியாது, என்று கூறி பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக நடத்திய மகளிர் அனைவருக்கும் வாழ்த்துகளைக்  கூறி தன் உரையினை முடிவு செய்தார்.

தமிழர் தலைவர் உரை

விழாவின் இறுதியாக, எந்த அரசியல் அமைப்புகளிலும் இல்லாத அளவிற்கு தலைமைச் செயற்குழுவில் 7 மகளிருக்கும், பொதுக்குழுவில் 32 மகளிருக்கும் வாய்ப்பளித்துள்ள பெண்ணுரிமை போராளி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார். தன் உரையில், இப்பயிற்சி வகுப்புகள் ஒரு கூட்டுக்குழு மனப்பான்மையுடன், ‘A Good Team Spiritஎன்று ஆங்கிலத்தில் சொல்வது போல் நடத்தப்பட்டுள்ளன. தந்தை பெரியார் அவர்களைப் பார்த்திராத இந்த இளம்பிள்ளைகள் இங்கு பதிவு செய்தக் கருத்துக்கள்இன்பத்தேன் வந்து பாயுது காதினிலேஎன்று கூறும் அளவுக்கு மகிழ்ச்சி அடையச் செய்திருக்கின்றன. இதற்காக உழைத்த அனைத்து மகளிர் பொறுப்பாளர்களுக்கும், பங்கேற்ற மாணவச் செல்வங்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். இந்த பயிற்சி வகுப்பின் மூலம்அமைப்பாளர், களப்பணியாளர், தொழில்நுட்பம்என மூன்று பிரிவுமே பட்டைத் தீட்டப்பட்டுள்ளன. இந்தக் காணொலிகள் மூலம் இரண்டு சொற்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. ‘ Mute  மற்றும்Unmute’ - காலம் காலமாகmuteசெய்யப் பட்டிருந்த மகளிரின் குரல்கள் இப்போதுUnmuteசெய்யப் பட்டுள்ளன. மறுக்கப்பட்ட வாய்ப்புகள் தரப்படும் போது திறமைகள் வெளிப்படுகின்றன! மக்களின் சரிபாதி ஆற்றல் மகளிர் தானே! அதனால் தானே இதைHuman Resources’ - மனித வளம் என்று குறிப்பிடுகிறார்கள் என்று கூறினார்.

தொடர்ந்து, பங்கேற்ற மாணவர்களின் ஆர்வத்தையும், திறமையையும் பாராட்டும் பொருட்டு இயக்க வெளியீடான ரூபாய் 700/- மதிப்புள்ள தந்தை பெரியாரின்பெண் விடுதலைஎன்ற புத்தகத்தைத் தன் குடும்பத்தின் சார்பில் மானமிகு மோகனா அம்மையார் மூலம் வழங்குவதாக ஆசிரியர் அறிவித்தார். எத்தனை புத்தகங்கள் என்பதையும், அவை யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் கழகத்தின் பிரச்சாரச்  செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களின் தலைமையில் மகளிர் பொறுப்பாளர்களின் முடிவிற்கே விட்டு விட்டார் ஆசிரியர் அய்யா அவர்கள். தவிர, இது வரை தலைமை அளித்த பணிகள் அனைத்தையும் மகளிர் தோழர்கள் மிகச் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர். எந்தப் பணியிலும் எங்களை ஏமாற்றம் அடையச் செய்ததில்லை. இந்தப் பணியையும் சிறப்புற நடத்தி முடித்திருக்கும் மகளிர் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துத் தன் உரையை நிறைவு செய்தார் ஆசிரியர்.

ஆசிரியர் அவர்களின் அன்பான பரிசுக்கு மகளிர் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்தார் மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்கள்.

இதனைத் தொடர்ந்து மிகச் சிறப்பான ஒரு கேள்வி - பதில் நிகழ்வு நடைபெற்றது. தமிழர் தலைவரிடம் தங்கள் கேள்விகளை முன்வைத்து, அதற்கு ஆசிரியர் அவர்கள் பொறுமையுடன் வழங்கியச் சிறப்பான, கருத்துச் செறிவான பதில்களைப் பெற்ற மகளிர் தோழர்கள் - பி.ஆனந்தி (சென்னை), தில்லைக்கரசி (தஞ்சை), எஸ்.அறிவுச்செல்வி (புதுக்கோட்டை), .ரேவதி (சென்னை), .நிவேதா (விழுப்புரம்), பாண்டிச்செல்வி (கோவை), ரத்னா (சென்னை), .நந்தினி (சிவகங்கை) மற்றும் ஜெ.சங்கீதா (விழுப்புரம்).

இனிதே நடைபெற்ற மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு (3 & 4) நிறைவு விழா நிகழ்வின் இறுதியில் பெரியார் களம் தோழர் இறைவி இறையன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற, நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி தேர்வு

மூன்றாம் பரிசு அறிவிப்பு

தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர், திராவிடர் கழகம் - ரூ.5000/-) மற்றும்  .முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம் - ரூ.5000) ஆகியோர் இணைந்து ரூ.10000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்கியுள்ளனர். நான்கு மகளிர் பெரியாரியல் பயிற்சி வகுப்பு பிரிவுகளிலும் மூன்றாவது மதிப்பெண் பெற்றவர்களுக்காகவும், 'பெண் விடுதலை' புத்தகங்கள் பெறுவதற்காகவும்நன்கொடை வழங்கிய இருவருக்கும் அனைத்து மகளிர் சார்பிலும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு பிரிவிலும் மூன்றாவது மதிப்பெண் பெற்று ரூ.2000/- பரிசாகப் பெறுபவர்களின் விவரம்:

பிரிவு - 1 : எஸ்.ஜான்சிராணி (சேலம்)

பிரிவு - 2 : கோ.சவுந்தர்யா (வேலூர்)

பிரிவு - 3 : எஸ்.அறிவுச்செல்வி (புதுக்கோட்டை)

பிரிவு - 4 : பா.ரேவதி (திண்டுக்கல்)

- மாநில திராவிடர் கழக மகளிரணி

மற்றும்  திராவிட மகளிர் பாசறை

தொகுப்பு: .இன்பக்கனி, துணைப் பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment