மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் நேற்று (2.8.2021) தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் படத்தைத் திறந்து வைத்தார். இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment