வாசிங்டன், ஆக. 2- அமெரிக் காவில் அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் இந்திய வம்சாவழியினர் பல்வேறு உயர் பதவி களை வகித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது அமெரிக்காவின் பன்னாட்டு மத சுதந்திரத் துக்கான தூதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வழக்குரைஞரான ரஷாத் உசேன் என்பவரை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இதன் மூலம் இந்த உயர் பதவி வகிக்கும் முதல் முஸ்லிம் நபர் என்கிற பெருமையை ரஷாத் உசேன் பெறுகிறார்.41 வயதான ரஷாத் உசேன் தற்போது அமெரிக்கா வின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஈடு பாட்டிற்கான இயக்குந ராக பதவி வகித்து வரு கிறார். இவரது நியமனம் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் அமெரிக் காவைப் போல தோற்றம ளிக்கும் மற்றும் அனைத்து மத மக்களையும் பிரதி பலிக்கும் ஒரு நிர்வா கத்தை உருவாக்குவதற் கான அதிபரின் உறுதிப் பாட்டை அடிக்கோ டிட்டு காட்டுகிறது. பன் னாட்டு மத சுதந்திரத்துக் கான தூதராக பணியாற்ற நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் ரஷாத் உசேன் ஆவார்” என கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment