தர்மபுரியில் பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தர்மபுரியில் பெரியார் பிஞ்சு சந்தா வழங்கல்

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 100 பெரியார் பிஞ்சு ஆண்டு சந்தாதிராவிடர் கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் ரூபாய் 24.000  அளிக்கப்பட்டது இதில் மாநில அமைப்புச் செயலாளர்  ஊமை. ஜெயராமன், மாநில மாணவர் கழக செயலாளர் செந்தூரப்பாண்டியன் சேர்ந்து  பெற்றுக் கொண்டனர். தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ. சிவாஜி, மாவட்ட செயலாளர் எல்அய்சி. மு.பரமசிவம், கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் கோ .தனசேகரன், தர்மபுரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதா மணி, தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ், முன்னாள் நகர தலைவர் பா.சி.காமராஜ் ஆகியோர் அளித்தனர். இந்த குறுகிய காலத்தில் பெரியார் பிஞ்சு சந்தா அளித்த அனைத்து பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் மாவட்ட திராவிட கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment