புதுவை மாநிலம் வில்லி யனூர் கொம்யூன் திரா விடர் கழகத் தலைவரும், புதுச்சேரி மண்டல திராவிட மாணவர் கழகத் தலைவர் தி. இராசாவின் தந்தையா ருமான தோழர் மானமிகு கரு.சி. திராவிடச் செல்வன் அவர்கள் நேற்று (8.8.2021) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவர் மருத்துவமனையில் இருந்தபோது தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது கூட, நலமுடன் இருக் கிறேன் - மீண்டு வருவேன் என்று உறுதிபடக் கூறியவர் - மறைந்துவிட்டார் என்று நினைக்கிற போது வேதனை மிகுகிறது.
கழகப் பணியில் எப்பொழுதுமே தீவிரத்துடன் இருக்கக் கூடியவர். போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்ற தோழரின் மறைவிற்கு வருந்துவதுடன், அவர் பிரிவால் பெருந்துன்பத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகம்
சென்னை
9-8-2021
No comments:
Post a Comment