சென்னையில் 9 இடங்களில் கடைகள் மீண்டும் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

சென்னையில் 9 இடங்களில் கடைகள் மீண்டும் திறப்பு

சென்னை, ஆக. 10- தியாக ராயர் நகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னை யில் 9 இடங்களில் மீண் டும் கடைகள் நேற்று (9.8.2021) முதல் திறக்கப் பட்டன. கரோனா பாது காப்பு வழிமுறைகளை பின்பற்ற வியாபாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கரோனா 2 அலைகளிலும் தலைநகர் சென்னை பெரிதும் பாதிக்கப்பட் டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக கரோனா பாதிக் கப்பட்டோரின் எண் ணிக்கை ஏறுமுகத்திலேயே இருந்தது. இந்தநிலையில் கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் அரசு தீவி ரம் காட்ட தொடங்கியது.

குறிப்பாக சென்னை யில் வணிக வளாகங்கள் மற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தை கட் டுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சென்னையில் மக் கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, தியாகராய நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு, ஜாம்பஜார் பாரதி சாலை சந்திப்பு, பக்கி சாகிப் தெரு - அபிபுல்லா தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்க் கெட், அமைந்தகரை மார்க்கெட், ரெட்ஹில்ஸ் மார்க்கெட், கொத்தவால் சாவடி மார்க்கெட் உள் பட 9 இடங்களில் உள்ள கடைகள், வணிக வளா கங்கள், அங்காடிகள் கடந்த 31ஆம்தேதி முதல் மூடப்பட்டன.

கடைகள் திறப்பதற் கான தடைக்காலம் நேற்று (9.8.2021) காலை 6 மணி யுடன் முடிவடைந்த நிலையில், கடைகள் மீண்டும் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நில வியது. அதேவேளை கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் மத்தியில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்தநிலையில் கரோனா பாதுகாப்பு வழிமுறை களை முழுமையாக பின் பற்றி மீண்டும் கடைகளை திறக்க பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் அனு மதி அளித்தது.

இதனையடுத்து தியா கராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங் களில் நேற்று (9.8.2021) காலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டன.

No comments:

Post a Comment