சென்னை, ஆக.1 பெரியார் பேருரையாளர் புலவர் மா. நன்னன் அவர்களுக்கும் அவரது மகனாகிய மருத்துவர் ந.அண்ணல் அவர்களுக்கும் சூலை 30ஆம் நாள் பிறந்த நாளாகும். 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
18ஆம் ஆண்டுக்கான நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா குவியம் செயலி வழியாக 30.07.2021 ஆம் நாளன்று தமிழர் தலைவரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்றது. நன்னன் குடி வேண்மாள் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், ஆசிரியர் அவர்கள் தமிழியல் என்ற பிழையின்றி எழுத உதவும் நூலையும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டார். சுயமரியாதை திருமண முறையில் இணை ஏற்ற அய்ந்து இணையர்களுக்கு சான்றும் பரிசும் வழங்கினார். இரா.செம்மல் நினைவு போட்டியில் வென்ற சிறந்த சிறுகதை படைப்பாளர்களுக்கு சான்றும் பரிசும் வழங்கிச் சிறபித்தார். சிறந்த தலைமையுரை வழங்கி விழாவைச் சிறப்பித்தார். பின்னர் முனைவர் பேராசிரியர் சிவஞானம் கலைமகள், ஆசிரியர் கா.பழனி முருகன், கவிஞர் கலைச்செல்வி, புலியூர் கேசிகன் ஆகியோர் உரையாற்றினர். நன்னன் குடி அவ்வை நன்றி சொல்ல விழா முடிந்தது.
படத்திறப்பு - நினைவேந்தல்
ஜெயங்கொண்டம், ஆக.1 ஜெயங்கொண்டம் பெரியார் பெருந்தொண்டர் கே.பி.கலியமூர்த்தி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 26-07-2021அன்று காலை11.00 மணியளவில் கீழக்குடியிருப்பு அவரது இல்லத்தில் மிக எளிய முறையில் நடைபெற்றது.
ஒன்றியத்தலைவர் மா.கருணாநிதி தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் துரை.பிரபாகரன், வழக்குரைஞர் மு.இராசா,நகர செயலாளர் கே.எம்.சேக, ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் நாட்டாரும், கே.பி.கலியமூர்த்தியின், உறவினருமான சுந்தர்ராஜ் அவர்கள் படத்தினை திறந்து வைத்தார். தா.பழூர் ஒன்றிய தலைவர் இராமச்சந்திரன்,அமைப்பாளர் தமிழ்சேகரன்,கோடங்குடி இரவி .மற்றும் பெரிய சாமி, நல்லதம்பி, ராமலிங்கம், ராயர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். மகன்கள் கமலக்கண்ணன், வேணுகோபால் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment