பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு...
லக்னோ, ஆக.13 சமை யல் எரிவாயு இணைப்பை இலவசமாக வழங்கும் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை ஒன்றிய பாஜக அரசுமீண்டும் துவங்கியுள்ளது.விரைவில் தேர்தல் வரவுள்ள உத்தரப் பிரதேசத்தில் உஜ்வாலா 2.0 திட்டத்தின் துவக்க விழா இரண்டு நாட்களுக்கு முன்புநடைபெற்றது. கூடுதலாக ஒரு கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் இந்த திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்நிலையில், உஜ் வாலா யோஜனா திட்ட சமையல் எரிவாயு உரு ளைகள் 90 சதவிகிதம் பயன்படுத்தப்படுவது இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
உஜ்வாலா திட்டத் தின் கீழ் விநியோகிக் கப்பட்ட 90 சதவிகித சமையல் எரிவாயு உருளைகள் பயன் படுத்தப்படாமல் கிடக் கின்றன. பெண்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசானது, கடந்த 7 ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலையை இரண்டு மடங்கு உயர்த் தியுள்ளது. வழங்கும் மானியத்தையும் மிகவும் சொற்பத் தொகையாக குறைத்துவிட்டது. உஜ்வாலா திட்டம் குறித்து அரசு நேர்மை யானதாக இருக்கும் பட்சத்தில் ஏழைகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும். பண வீக் கத்தை குறைக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட் டுள்ளார்.
No comments:
Post a Comment