மாஸ்கோ, ஆக.13 டெல்டா வகை கரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்- வி தடுப் பூசி 83 சதவிகித செயல்திறன் கொண்டதாக உள்ளது என ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுகான் மாகா ணத்தில் முதல்முதலில் கரோனா வைரஸ் கண்டறியப் பட்டது.
அதன்பின்னர் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் கரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, டெல்டா வகை கரோனா வைரஸ் பிற வகை களை காட்டிலும் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக 83 சதவிகிதம் செயல்திறன் கொண்டதாக உள்ளது என ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கெல் முரஷ்கோ தெரிவித்துள்ளார்.
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி டெல்டா வைரசுக்கு எதிராக எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலேயே செயல்திறன் கொண்டதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment