தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 71 சதவீதம் பேர் மருத்துவப் படிப்பில் சேர அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 71 சதவீதம் பேர் மருத்துவப் படிப்பில் சேர அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு

சென்னை, ஆக.1 மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு (.பி.சி.) 27 சதவீதம், பொருளாதாரத்தில் நலிவுற்றவர் களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இந்திய மக்கள் தொகையின் அடிப்படையில் பிற் படுத்தப்பட்ட வகுப் பினை சேர்ந்த மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர் இருக்கிறார்கள்? என்பதை மிகவும் துல்லியமாக எடுத்துக்கூற இயலாது.

எனினும், ஆரம்பப்பள்ளியில் மாண வர்கள் சேருவதற்காக வழங்கிய விவரங் களின் அடிப்படையில், ஜாதி வாரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 45 சதவீதம் பேரும், பொதுப் பிரிவு மாணவர்கள் 25 சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பு மாண வர்கள் (எஸ்.சி.) 19 சதவீதம் பேரும், பழங்குடியின மாணவர்கள் (எஸ்.டி.) 11 சதவீதம் பேரும் இருக்கிறார்கள்.

தென் மாநிலங்களில் அதிகம்

கல்வி மேம்பாட்டுக்கான ஒருங் கிணைந்த மாவட்ட தகவல் முறை என்ற அமைப்பு, மாணவர்களின் ஜாதி சான்றிதழ் தொடர்பான விவரங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேகரித்து வருகிறது.

இதன் அடிப் படையில் பார்த்தால், தென்மாநிலங்களில் தான் பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாண வர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தெரிய

வருகிறது.

அதிலும் குறிப்பாக ஒட்டுமொத்த இந்தியா விலேயே தமிழ்நாட்டில் தான் பிற்படுத்தப் பட்ட வகுப்பு மாணவர்கள் அதிகமாக இருக் கிறார்கள்.

தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 71 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இதற்கு அடுத்தப் படியாக கேரளாவில் 69 சதவீதம் பேரும், கருநாடகாவில் 62 சதவீதம் பேரும் இருக்கிறார்கள்.

வட மாநிலங்களை பொறுத்தமட்டில் பீகாரில் 61 சதவீதமும், உத்தரப்பிர தேசத்தில் 54 சதவீதமும், ராஜஸ்தானில் 48 சதவீதமும், அரியானாவில் 31 சதவீதம் பேரும், பஞ்சாப்பில் 16 சதவீதம் பேரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் இருக்கிறார்கள்.

அதிக மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 71 சதவீதம் இருப்பது போன்று, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 23 சதவீதமும், பொதுப்பிரிவு மாணவர்கள் 4 சதவீதமும், பழங்குடியின மாணவர்கள் 2 சதவீதமும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அதிகமாக இருப்ப தால், ஒன்றிய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடு மூலம் அதிகமானவர் களுக்கு மருத்துவக் கல்வியில் சேர்ந்து படிப் பதற்கான வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

இதனால் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு அறிவிப்பு தமிழ்நாட்டுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்று கருதப்படு கிறது.

மேலும், தமிழ்நாடு மருத்துவ துறையில் மேலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான உந்து சக்தியை வழங்கு வதாகவும், மருத்துவத்தில் சாதனை படைக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு மாணவர்களின் கனவுகள் நிச்சயம் நிறைவேறும் என்று கட்டியம் கூறும் வகையிலும், இடஒதுக்கீடு மூலம் பயன்பெறும் தகுதியுள்ள மாணவர்கள் அதிகமாக இருக்கும் தற்போதைய சூழல் அமைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment