சென்னை, ஆக.1 தமிழ் நாட்டில் 66 சதவீதம் பேருக்குகரோனாவுக்கு எதிரான நோய்எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பது பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந் துள்ளது.
தமிழ்நாடு பெது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தலை மையிலான குழுவினர், தமிழ்நாட்டில் கரோனா வுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் பொது மக்களிடம் எந்த அள வுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆய்வை நடத்தி வருகின் றனர்.
2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருந்தது. 2ஆம் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்தஆய்வில் 29 சதவீதம் பேருக்கு மட்டுமே கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் இருந்தது.
இதையடுத்து, 3ஆம் கட்ட ஆய்வு கடந்த ஜூலை மாதத்தில் நடை பெற்றது. இதில், சென்னை, திருச்சி, மதுரை, கேவை, திருநெல்வேலி, சேலம் என மாநிலம் முழுவதும் 888பகுதிகளில் 26,610 பேரின் ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 17,624 (66.2 சதவீதம்) பேருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் உருவாகியுள்ளது.
அதிகபட்சமாக விருது நகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கும், குறைந்தபட்சமாக ஈரேடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்புத் திறன் உள்ளது. தமிழ்நாட்டில் 1.60 கோடி பேருக்குமேல் தடுப்பூசி போட்டுக் கொ ண்டுள்ளனர். மேலும், 25 லட்சம் பேருக்கு மேல் தொற்றால்பாதிக்கப் பட்டு, குணமடைந்துள் ளனர். இதுவே நோய் எதிர்ப்புத் திறன் அதிக ரித்திருப்பதற்கு காரணம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித் தனர்.
No comments:
Post a Comment