கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் தயக்கம்: ஆய்வில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் தயக்கம்: ஆய்வில் தகவல்

சென்னை,ஆக.10- தமிழ்நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் இருப்பதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலை வீச தொடங்கியது முதல் நாள்தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்ற தால் மக்கள் அச்சம் அடைந்தனர். முதலில் தடுப்பூசி செலுத்துவதில் மக்களுக்கு சிறிது தயக்கம் இருந் தது. இதனால் தடுப்பூசி செலுத்து வது குறைவாக இருந்தது. இதை யடுத்து தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து சென்றதால் தமிழ்நாடு மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டது.

தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி முக்கியம் என் பதை உணர்ந்த மக்கள், தயக்கத்தை உடைத்தெறிந்த ஆர்வத்துடன் தடுப்பூசி மய்யங்களில் கூட்டம், கூட்டமாக குவிந்து தடுப்பூசி போட்டு கொள்கிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் 60 வயதிற்கு மேற் பட்டவர்களிடம் தடுப்பூசி செலுத்த தயக்கம் இருப்பது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. கரோனா 2ஆம் அலை பரவ தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகா தாரத்துறை சார்பில் ஆய்வு நடத் தப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக் குநர்களால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவது தெரியவந்துள்ளது. நகர்புறங்களில் 82.5 சதவீதம் பேரும், கிராமப்புறங் களில் 79.7 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள் ளனர்.

வயது வாரியாக எடுக்கப்பட்ட ஆய்வில் 18 முதல் 44 வயதுடை யவர்கள் 16.9 சதவீதம் பெரும், 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத் திக்கொள்ள தயக்கம் காட்டுவது தெரியவந்துள்ளது. இதில் அதிக பட்சமாக 60 வயதுக்கு மேற்பட் டவர்களில் 27.6 சதவீதம் பேர் தடுப்பூசி குறித்து அச்சம் தெரிவித் துள்ளனர். மக்களின் தயக்கத்தை போக்கி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.


No comments:

Post a Comment