மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்காததால் 60 மணி நேரம் வீண் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதிக்காததால் 60 மணி நேரம் வீண்

புதுடில்லி, ஆக.9  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 14ஆவது நாள் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (7.8.2021) காலை தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளி நிலவுவதால், ஆகஸ்ட் 9ஆம்தேதி இன்று காலை 11 மணிவரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில், மாநிலங்களவையில் 3 வாரங்களில் 78 மணி நேரத்தில் 60 மணி நேரம் அமளி காரணமாக வீணாகியுள்ளது என்றும்,  3ஆவது வாரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 8 மசோதாக்கள் மீது 17 கட்சிகளின் 68 உறுப்பினர்கள் பேசி உள்ளனர் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment