வாசிங்டன், ஆக. 9- மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, சுவீடன், பிரான்சு, ஆகிய அய்ரோப்பிய நாடுகளில் காணப்படுகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டிய லில் அமெரிக்கா, இந்தியா, பிரே சில், பிரான்சு, ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80 விழுக்காட்டுக்கும் மேல் டெல்டா வைரசால் ஏற்பட்டுள்ளது. இருப் பினும் தடுப்பூசி காரணமாக அதி கமான நபர்கள் மருத்துவமனை களில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது.
அமெரிக்காவின் சில இடங் களில் கரோனா தடுப்பூசி செலுத்து வதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தினால், விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என அமெரிக்க அரசு எதிர்பார்த்தது. ஆனால், அங்கு டெல்டா வகை வைரஸ் தீவிரமாக பரவி அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இந்தநிலையில் மக்கள் தொகை யில் 50 சதவீதத்தினர் இரண்டு தவணை கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளதாக அமெ ரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிப ரின் குழுவின் கரோனா தடுப்பு நடவடிக்கை குழு இயக்குநர் சைரஸ் ஷாபார் கூறியதாவது:
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து தடுப்பூசி செலுத்தும் பணியை தீவி ரமாக மேற்கொண்டு வருகிறார். இருப்பினும், பழைமைவாதிகள் அதிகம் வாழும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தடுப்பூசி விநியோகம் ஏப்ரல் மாதம் சற்று குறைந்தது.
18 வயதுக்கு மேற்பட்டோரில் 50 சதவீத அமெரிக்கர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த வேண் டும் என்ற இலக்கு கடந்த மே மாதம் எட்டப்பட்டது.
50 சதவீத அமெரிக்க மக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு தவணை மாடர்னா அல்லது பைசர் தடுப்பூசிகள் அல்லது ஒரு தவணை ஜான்சன் அன்ட் ஜான் சன் தடுப்பூசிகளை 16.5 கோடி அமெரிக்கர்கள் செலுத்தியுள்ள னர். இதை நாம் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment