சென்னை, ஆக.2 தமிழ்நாட்டில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வழக்கத்தைவிட 50 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:
ஜூலை மாதத்துக்கான நிகழ்தகவு வானிலை முன்னறிவிப் பின்படி, இந்தியாவின் சில மாநிலங்களில் மழை இயல்பா கவோ, இயல்பைவிட குறைவா கவோ பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டில் இயல்பைவிட 50 சத வீதம் அதிக மழை பதிவாகி யுள்ளது
ஜூலை முதல் வாரத்தில் வளி மண்டல சுழற்சி மற்றும் தென் மேற்குப் பருவக்காற்று காரண மாக தமிழ்நாட்டில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பதிவானது. அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 90.1மி.மீ. மழை, குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 5.60 மி.மீ. மழை பதிவானது.
ஜூலை 2ஆவது வாரத்தில் வளிமண்டலத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு மற்றும் தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக பரவலாக மிதமா னது முதல்கனமழை பதிவானது. அதிகபட்சமாக கோவை மாவட் டத்தில் 105.2 மி.மீ. மழை பதி வானது.
ஜூலை 3ஆவது வாரத்தில் வளிமண்டல சுழற்சி, திசைவேக மாறுபாடு மற்றும் தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக பரவ லாக மிதமானது முதல் கனமழை பதிவானது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 119 மி.மீ. மழை பதிவானது.
ஜூலை 4ஆவது வாரம் மற்றும் மாத இறுதி நாட்களில் குறிப்பிடத்தக்க அம்சம் ஏதும் இல்லை. வெப்பச் சலனம், தென் மேற்குப் பருவக்காற்றின் காரண மாக சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பதிவானது. அதிகபட்சமாக நீலகிரி மாவட் டத்தில் 209.1 மி.மீ. பதிவானது.
ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாடு புதுச்சேரியில் பதிவான சராசரி மழை அளவு 186.9 மி.மீ. வழக்கமாக இந்த கால கட்டத்தில் 125 மி.மீ. மழைதான் பெய்யும்.
எனவே, இந்த ஆண்டு வழக் கத்தைவிட 50 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment