தூத்துக்குடி, ஆக.9 தூத்துக்குடி மேலசண்முக புரத்தை சேர்ந்தவர் நடராஜன்(37). இவர், தூத்துக்குடி மாநகர 45ஆவது வட்ட திமுக செயலாளராக இருந்து வந்தார். மேலும், தூத்துக்குடி ராமசாமிபுரம் முதல் தெருவில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்தார். திருமண மாகாதவர். 6.8.2021 அன்று மேலசண்முகபுரத்தில் உள்ள முனியசாமி கோயில் கொடை விழாவை நட ராஜன் முன்னின்று நடத்தினார். நள்ளிரவில் கோயிலில் வழிபாடு நடந்தபோது தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்க கார்த்திக்(28) உள்ளிட்ட சிலர் கூட்டமாக நின்றுள்ளனர். அவர்களிடம் கரோனா ஊரடங்கு காலத் தில் காவல்துறையிடம் கஷ்டப்பட்டு விழாவை நடத்த அனுமதியை பெற்றுள்ளோம். எனவே கூட்டமாக நிற்காதீர்கள், தள்ளி நில்லுங்கள் என்று நடராஜன் கூறியுள்ளார்.
இதனால், அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அங்கிருந்தவர்கள் சமா தானம் செய்து அனுப்பினர். இந்நிலையில், நேற்று 7.8.2021 அன்று அதிகாலை 1.30 மணியளவில் நடராஜன், கோயில் பொருட்களை வைப்பதற்காக ராமசாமிபுரத் தில் உள்ள தனது அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அவரது அலுவலகம் முன்பு வழிமறித்த தங்ககார்த்திக் உள்ளிட்ட 4 பேர், நடராஜனை சரமாரியாக கத்தியால் குத்தி, கல்லால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமராக்களில் பதி வான காட்சிகளின் அடிப்படையில் கொலையாளிகளை காவல்துறையினர் கண்டறிந்தனர். தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்க கார்த்திக், அருண்குமார்(22), அந்தோணி முத்து(21), மாரிமுத்து (21) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
கரோனா விழிப்புணர்வு வாரம் நிறைவு
அமைச்சர் தலைமையில் சைக்கிள் பேரணி
சென்னை, ஆக.9 கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு 7.8.2021 அன்று திருத்தணியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரோனா விழிப்புணர்வு வார நிறைவை முன்னிட்டு 7.8.2021 அன்று திருத்தணியில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா விழிப் புணர்வு வார நிகழ்வுகள் கடந்த 1-ஆம் தேதி தொடங்கின.
கரோனா விழிப்புணர்வு வாரம் நிறைவு பெற்றது. இதையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுப் பேரணி, கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. திருத்தணி நகராட்சி அலுவலக வளாகத்தில் கையெழுத்து இயக்கம், கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மேலும், திருத்தணி நகராட்சி அலுவலகம் முதல் பேருந்து நிலையம் வரை சைக்கிள் பேரணியும் நடைபெற்றது.
பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை யில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பி னர்கள் சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழிப்புணர்வுப் பேரணியில் அமைச்சரே சைக்கிள் ஓட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
2,200 மாநகர பேருந்துகளில்
சிசிடிவி கேமரா பொருத்தப்படும்
சென்னை, ஆக.9 பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 2,200 மாநகர பேருந்துகளில் வரும் நவம்பருக்குள் சிசிடிவி கேமரா பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் மாநகர பேருந்துகளில் நடக்கும் திருட்டுகளைத் தடுக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தெடர்பாக அரசு பேக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது: கரோனா தாக்கத்துக்குப் பிறகு பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல் மாநகர பேருந்துகளை இயக்கி வருகிறோம். இருப்பினும், கரோனாவுக்கு முன்பு இருந்ததைப்போன்று மாநகர பேருந்துகளில் பயணிகள் வருகை இல்லை. பேருந்து களில் நகை, அலைபேசி உள்ளிட்டவை திருட்டு போனால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் பய ணிகள் மூலம் புகார் கெடுக்க நடத்துநர்களுக்கு ஏற்கெ னவே அறிவுறுத்தினோம். இருப்பினும், குற்றவாளி களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமராக் களை பொருத்தும் திட்டத்தின் முன்னோட்டமாக சென் னையில் 21ஜி, 18பி, 23சி, 29சி உள்ளிட்ட வழித்தடங்களில் சில பேருந்துகளில் பொருத்தப்பட்டு நடத்தப்பட்ட சோதனை முயற்சி திருப்தியாக இருக்கிறது. இந் நிலையில், வரும் நவம்பர் இறுதிக்குள் 2,200 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை நிறைவு செய்யவுள்ளோம். இந்த கேமராக்களை இணைத்து ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் பல்லவன் இல்லத்தில் சிறப்பு மய்யம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment