ஓரியன்ட்டின் அதிவேக ‘பால்கன் 425' மின்விசிறி அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

ஓரியன்ட்டின் அதிவேக ‘பால்கன் 425' மின்விசிறி அறிமுகம்

சென்னை, ஆக. 11- ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம் 1200 மில்லி மீட்டர் ஸ்வீப்சைஸ் கொண்டபால்கன் 425’ என்கிற இந்தியாவின் அதி வேக மின்விசிறியை அறிமுகம் செய்துள்ளது. ஆச்சரியமூட்டும் விதத்தில் நிமிடத்திற்கு 425 முறை சுற்றக்கூடியதால் இந்த மின்விசிறி காற்றை வேகமாகவும், விசாலமா கவும் வீசும். இதே ரகத்தில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளஓரியன்ட் சம்மர் பிரீஸ் ப்ரோஎன்கிற அதி வேக மின்விசிறியானது வலிமை யான 14 போல் மோட்டார் மற்றும் அட்வான்ஸ்டு பிஎஸ்பிஓ தொழில் நுட்பத்துடன் வருகிறது.

தமிழ்நாட்டில் பால்கன்425 மின் விசிறியை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் இதனை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. வெள்ளை, மேட் பிர வுன் மற்றும் மெட்டாலிக் ப்ரான்ஸ் காப்பர் ஆகிய அழகழகான வண் ணங்களில் வரும் ஓரியன்ட் பால் கன் 425 மின்விசிறி ரூபாய். 2655க் குக் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுபற்றி ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் துணை செயல் தலை வர் அத்துல் ஜெயின் கூறுகையில், “ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம் முக்கிய கவனம் செலுத்தும் சந்தை யாக தமிழ்நாட்டை கருதுகிறது. தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் பெரும்பாலும் வெப்பமான மற்றும் புழுக்கமான பருவநிலையே நிலவுவதால், காற் றினை வேகமாக தள்ளும் ஹை-திரஸ்ட் மின்விசிறிகளுக்கு அதிக தேவை உள்ளது. எங்களது அதி வேக மின்விசிறியைக் காட்டிலும் வேகமான மின்விசிறியான பால் கன்425-அய் நாங்கள் உற்சாகத் துடன் அறிமுகம் செய்கிறோம். தமிழ்நாட்டில் கடும் வெப்பம், அதிகரித்து வரும் தேவை மற்றும் வீட்டிலிருந்தே பணிபுரியும் கலாச் சாரம் தொடரும் இந்த காலகட் டத்தில், நாங்கள் எங்களதுசூப் பர்ஸ்பீடு ஜோடிக்குநல்ல வர வேற்பு கிடைக்குமென நம்புகி றோம், என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment