மத்திய கிழக்கு நாடுகளை கரோனா 4ஆம் அலை தாக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 1, 2021

மத்திய கிழக்கு நாடுகளை கரோனா 4ஆம் அலை தாக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா, ஆக. 1- கரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் உரு மாற்றம் அடைந்தது. இதில் இந்தியாவில் உருமாறிய கரோ னாவுக்கு டெல்டா என்ற பெய ரிடப்பட்டுள்ளது.

டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகா தார அமைப்பு  எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே டெல்டா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய தால் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிலநாடுகளில் கரோனா 3ஆம் அலை தாக்கிக்கொண்டிருக் கிறது.

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா 4-ஆம் அலை தாக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப் பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி இயக்குநர் அகமத்- அக்-மன்தாரி கூறியதாவது:-

கரோனா வைரசின் டெல்டா மாறுபாடு தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா 4ஆம் அலையை தூண்டியுள்ளது. ஈரான், ஈராக், துனிசியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.

இந்த பகுதியின் மக்கள் தொகையில் 5.5 சதவீதம் மட் டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, மற்ற அனைத்து பகுதிகளிலும் டெல்டா மாறுபாடு வைரஸ் வேகமாக பரவுவது கவலை அளிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் கரோனா 4ஆம் அலையில் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment