புதுடில்லி. ஆக 13- 8 காவல்துறை அதிகாரிகள் உள்பட 152 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சரின் விருதுகள் அறிவிக்கப் பட்டு உள்ளது.
இவர்களில் 28 பேர் பெண் காவல் அதிகாரிகள், அவர்களில் 4 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட 152 காவல் அதிகாரிகளுக்கு ஒன்றியய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாட்டில் 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறி விக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விருது கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. குற்றவியல் விசாரணை யின் உயர் தொழில்முறை தரங்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், விசா ரணை அதிகாரிகளின் புலனாய்வு சிறப்பை அங்கீகரிக்கும் நோக்கத்துட னும் இந்த விருது வழங்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டிற்கான “ஒன்றிய உள்துறை அமைச்சரின் பதக்கத்திற்கான சிறப்புப் பதக்கம்” 152 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, சிபிஅய் அதிகாரிகள் 15 பேர் பதக் கத்திற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள னர். மேலும்,
மத்திய பிரதேசம் மற்றும் மகா ராட்டிரா காவல்துறையிலிருந்து தலா 11 பேர்,
உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 பேர்,
கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 9 பேர்,
8 பேர் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.
7 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள்
6 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
கருநாடகா மற்றும் டில்லி காவல் துறை மற்றும் மற்ற மாநிலங்கள்/யூனி யன் பிரதேசங்களில் இருந்து மீதமுள் ளவை. இவர்களில் இருபத்தி எட்டு (28) பெண் காவல்துறை அதிகாரிகள் அடங் குவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விருது பெறும் காவல் ஆய்வாளர்கள் எம். சரவணன், அன்பரசி, கவிதா, ஆர்.ஜெய வேல், கலைச்செல்வி, ஜி.மணிவண் ணன், பி.ஆர்.சிதம்பரம் முருகேசன், சி.கண்மணி. ஆகிய எட்டுப் பேராவர்.
No comments:
Post a Comment