கரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

கரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு

ஜெனீவா, ஆக.13 கரோ னாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகளை ஆய்வுக்கு எடுக்க உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கரோனாவை குணப்படுத் தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில், ரெம்டெசிவிர், அய்ட் ராக்சி குளோரோகுயின் உள் ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய் யப்பட்டன. அவை பய னற்றவை என்று முடிவு செய்யப்பட்டன.

இந்தநிலையில், வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மேலும் 3 மருந்துகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் போவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

மலேரியாவுக்கு பயன்படும் அர்டிசுனேட், புற்றுநோய் மருந்தான இமடினிப், நோய் எதிர்ப்பு சக்திக்கு பயன்படும் இன்பிளிக்சிமேப் ஆகிய மருந்துகள் பரிசோதிக்கப்பட உள்ளன. 

No comments:

Post a Comment