பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க 3 மாத கால அவகாசம்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 10, 2021

பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க 3 மாத கால அவகாசம்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக. 10- பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவ காசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

ஆவின் நிறுவனம் நுகர்வோர் சேவையில் எந்தவித குறைபாடுகளும் இன்றி அனைவரும் பயன்பெறும் வகையில் சேவையாற்றி வருகின்றது. முதல்அமைச்சர் மு.. ஸ்டாலினால் 16-.5.-2021 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. மூன்று குறைக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்க ளும் பயனடையும் வகை யில் வினியோகம் செய் யப்பட்டு வருகின்றது.

மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் 1985 ஆம் ஆண்டு முதல் பால் வினியோகம் செய்யப் பட்டு வருகிறது. ஆவின் நுகர்வோர்கள் இந்த பால் அட்டை திட்டத் தின் கீழ் 4.5 லட்சம் உறுப்பினர்கள் பயன டைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் மாதத் தொகையை முன்கூட் டியே செலுத்துவதால் ஆவின் நிர்வாகத்திற்கு முன்வைப்புத் தொகை யாகப் பெறப்பட்டு வரு கின்றது. இத்திட்டத்தின் கீழ் நுகர்வோர்களுக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லிட் டருக்கு குறைந்த விலை யில் வழங்கப்பட்டு வருகி றது.

மாதாந்திர பால் அட்டை பால் வாங்கும் நுகர்வோர்கள், தங்களு டைய பணியிட மாற்றம் மற்றும் இதர காரணங் களால் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு சென்று விடுகின்றனர். ஆனால் அவர்களுடைய பெயரிலேயே சில பால் வினியோகம் செய்யும் நபர்கள் தொடர்ந்து மாதாந்திர பால் அட் டைகளை புதுப்பித்து வருகின்றனர். அட்டை தாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பால் ரொக்க விற்பனைக்கு அதாவது ரூ.2 முதல் ரூ.3 வரை கூடுதலாக விற் பனை செய்யப்பட்டு வரு கின்றது.

கடந்த மாதம் முதல் மேற்கண்ட நுகர்வோர் கள் விவரங்கள் சேகரிக் கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது 80 ஆயிரம் பால் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 40 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையில் மாதம் ரூ.36 லட்சம் நட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள படிவத்தில் கல்வித் தகுதி, தொழில் விவரம், மாத வருமானம், ஆதார் விவரம் எதுவும் பூர்த்தி செய்ய வேண்டிய அவ சியம் இல்லை.

மேலும் நுகர்வோர் களின் வசதிக்காக பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே, நுகர் வோர்கள் புதிய விண்ணப் பத்தில் தங்களின் அடிப் படை விவரங்களை மட் டும் பூர்த்தி செய்து பால் அட்டையைப் புதுப்பிக் கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment