தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம்
சென்னை, ஆக.1 தமிழ்நாட்டில் கரோனா 3ஆவது அலை வருமா? என்பது பற்றி சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக் கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையை விட கரோனா 2ஆவது அலையில் தீவிர பாதிப்புகளும், அதிக உயிரிழப்பு களும் ஏற்பட்டன. இதுதவிர, கரோ னாவில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்தோருக்கு, கருப்பு பூஞ்சை நோய் தொற்று பெரும் பாதிப்பு களை ஏற்படுத்தியது. தொடர்ந்து வெள்ளை, மஞ்சள், பச்சை என்றும் பூஞ்சை நோய் தொற்று மக்களை வாட்டி எடுத்தது.
சமீப வாரங்களாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் அதன் தீவிரம் குறைந்து வந்தது. எனினும், அடுத்த சில மாதங்களில் கரோனா 3ஆவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். இதனை முன்னிட்டு அரசு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெருந்தொற்றை தவிர்க் கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப் பிரமணியன், சுகாதாரத்துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கரோனா 3ஆவது அலை வரும் என்பது தெரியாவிட்டாலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனாவில் இருந்து மீண்டு வர முடியும் என்று கூறியுள் ளார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலம் தீவிரமாக கரோனா விழிப் புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
கூடுதல் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக் கப்படுகிறது. அங்கு தடுப்பூசி போடும் பணிகளை அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கரோனா 3ஆவது அலையில் குழந் தைகள் அதிகமாக பாதிக்கப்படு வார்கள் என கூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு 25 சதவீதம் அளவு படுக்கைகள் குழந்தைகளுக் காக அமைக்கப்பட்டுள்ளன என் றும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment