தமிழ்நாட்டில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 9, 2021

தமிழ்நாட்டில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை

 தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது!

-தமிழ்நாடு நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் -

சென்னை, ஆக.9  தமிழ்நாட்டில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத் திற்கும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது என்றார் தமிழ்நாடு நிதிய மைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக  ராஜன் அவர்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (9.8.2021) நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையா ளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது. தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முதலமைச்சர் காட்டிய பாதையில் வந்த அறிக்கை இது என அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் 1995--1996- ஆம் ஆண்டு கால இறுதியில் நிதி நிலைமை நன்றாக இருந்தது. அப்போது, அரசி டம் ரூ.649 கோடி நிதி ரொக்கமாக இருப்பு இருந்தது.

2001- ஆம் ஆண்டு தி.மு.. ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கியபோது, கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அதே ஆண்டு, .தி.மு.. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்டு மாதம் 18- ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று, நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக் கையையும் வெளியிட்டது.

2006- ஆம் ஆண்டு .தி.மு.. ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது. அடுத்து, 2011- ஆம் ஆண்டு தி.மு.. ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந் தது. பிறகு, 2011 முதல் 2016- ஆம் ஆண்டுவரையிலான .தி.மு.. ஆட் சிக் காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது.

2016- ஆம் ஆண்டு மீண்டும் .தி.மு.. ஆட்சி அமைத்த நிலையில், 2021- ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கடன் அளவு 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டை .தி.மு.. தாக்கல் செய்தபோது, தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.4 லட்சத்து 85 ஆயி ரத்து 502 கோடியே 54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்றும் அப்போதே தெரி விக்கப்பட்டது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. மடங்கில் கணக்கிடும்போது 13 மடங்கு உயர்ந்தி ருக்கிறது.

தற்போதைய நிலையில், கரோனா பாதிப்பால் அரசுக்கு வருவாய் வெகு வாக குறைந்துள்ளது. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, கடன் அளவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.., முதலில் அரசின் நிதி நிலையை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தது. அப்போதே, விரைவில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவிக்கப் பட்டது.

ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாகி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு 2001- ஆம் ஆண்டு வெள்ளை அறிக்கையானது, சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெளியிடப்  பட்டது. ஆனால், இந்த முறை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறும்போது,

வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப் பட்டது. தமிழ்நாடு அரசு வெளிப் படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம்.

தி.மு.. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 மாதங்கள் கரோனா 2 ஆவது அலை தடுப்புப் பணியில் போய் விட்டது. மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக் குறை 3.16 சதவீதமாக  ஆக உள்ளது

தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது; 2006--2011 தி.மு.. ஆட்சியில் அரசின் வருமானம் உபரி யாக இருந்தது.

வருமானம் இல்லாத அரசாங்கம் எந்த பிரச்சினையை சந்திக்கும் என்பது அனைவரும் அறிந்ததே; தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது.

ஒன்றிய அரசின்  வரிப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கு முழுமையாக வந்துசேரவில்லை.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட மையாக இதை செய்கிறோம்.

முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்தியாவில் வேறேந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை.  என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டு களில் ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடைக்கால பட் ஜெட்டின்போது மொத்த கடன் ரூ.5,70,186 கோடியாக இருந்தது.

தமிழ்நாட்டில் பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது

கடனை செலுத்தும் தன்மை குறைந் ததால் வட்டி சதவீதம் அதிகரிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப் பட்டரூ. 3 லட்சம் கோடி பொதுக் கடனில் 50 சதவீதம்  வருவாய் பற்றாக்குறைக்கான செலவினம்.

2011-2016 ஆம் ஆண்டு ஆட்சியில் திட்டமிடப்படாத செலவுகளால் வரு வாய் பற்றாக்குறை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது என கூறினார்.

No comments:

Post a Comment