புதுடெல்லி, ஆக.9- நாடா ளுமன்ற மக்களவையில், மத்திய வீட்டு வசதி மற் றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகம் சார் பில் புள்ளி விவரங்கள் தாக்கல் செய்யப் பட்டன.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாடு முழு வதும் 255 மாவட்டங்கள், 1,597 வட்டங்கள் மற்றும் 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் பற்றாக் குறை உள்ள இடங்களாக அடை யாளம் காணப்பட்டுள் ளன. மராட்டிய மாநி லத்தில், அவு ரங்காபாத், லட்டூர், சோலாப்பூர், புசாவல் ஆகிய பெரிய, நடுத்தர நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பது, நகரங்களில் மக்கள் பெருக்கம், கிடைக்கும் நீரைதிறமையின்றி பயன்படுத் துதல் ஆகியவையே நகரங் களில் குடிநீர் பற்றாக் குறைக்கு காரணங்கள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment