ஜெனீவா, ஆக. 9- சீனாவின் வுகான் நகரில் வெளிப் பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட் டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்சு ஆகி யவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.29 கோடி யைக் கடந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.22 கோடிக்கும் அதிகமா னோர் குணமடைந்துள்ள னர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.98 லட்சத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள் ளனர்.
வைரஸ் பரவியவர் களில் 1.63 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 98 ஆயிரத்துக்கு மேற் பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
No comments:
Post a Comment