ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

டெக்கான் கிரானிகல், சென்னை:

·       தமிழ் நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் இன்று (2.8.2021) கலந்து கொண்டு சட்டப்பேரவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·   பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

·    கான்பூரில் நடந்த பிக்ரு கலவரத்தில் பல "அப்பாவி" பிராமணர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உத்தரப்பிரதேச யோகி தலைமையிலான பாஜக அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் எதிராக செயல்படுகிறது என்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா கூறியுள்ளார்.

·   கேரளாவில் சபரிமலை 'மேல்சாந்தி' (தலைமை பூசாரி) நியமனத்தில் மலையாளப் பார்ப்பனர்களை மட்டுமே நியமிக்க முடியும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளது.

· மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில்அன்னை தமிழில் அர்ச்சனை' (தாய் தமிழில் பூஜை) என்ற பெயரிலான திட்டம் இந்த வார புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை முதல் தொடங்கப்படும். ஒரு மாதத்தில் 46 பெரிய கோயில்களிலும் துவங்கப்படும் என இந்து மத மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

·   ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் இந்திய காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங் களை தனியார்மயமாக்கும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, ஒன்றிய அரசு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

·    2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகத் தெரியவில்லை எனில், நரேந்திர மோடி அரசு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க அரசமைப்பு விதித்த 2026 கால அட்டவணைக்கு முன்பாக செய்திட திட்டமிடலாம். இது தமிழ் நாடு உள்ளிட்ட தென்னாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்திடும் என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் எச்சரித்துள்ளார்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment