பள்ளிக்கல்வித் துறை சார்பில் அரசாணை வெளியீடு
சென்னை, ஆக.1 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதிலாக அந்த இடத்தில் தேர்ச்சி என்று அச்சிட்டு வழங்க அனுமதி கொடுத்து பள்ளிக்கல்வி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ்-2 முடித்த மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு மதிப்பெண் அவசியம் என்பதால், அவர்க ளுக்கு மதிப்பெண்கள் கணக் கிடப்பட்டு வழங்கப்பட்டன. ஆனால், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 வகுப்பு மாணவர்க ளுக்கு பொதுத்தேர்வு எழு தாமலேயே அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட் டுவிட்டது. இருந்தாலும் அவர்களுக்கு மதிப்பெண் எதுவும் வழங்கப்படவில்லை . அதற்கு மாறாக தேர்ச்சி என்ற வாச கம் மட்டும் குறிப்பிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறி வித்துள்ளது. இதுதொடர் பாக பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட் டுள்ள அரசாணையில் கூறியி ருப்பதாவது:
கரோனா தொற்று பர வல் காரணமாக 2020-2021ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வு, பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2020-2021ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. {10ஆம் வகுப்பு), பிளஸ்-1 (11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்க ளுக்கு தேர்ச்சிக்கான சான்றிதழ் வழங்குவது குறித்து கடந்த 8.5.20021 அன்று பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், 'எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ் 1 படித்த அனைத்து தேர்வர் களும் தேர்ச்சி என அறிவிக் கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வர் பின்வரும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் என சான்றளிக்கப்படுகிறது' என்ற வாசகத்தை அச்சிட்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான இடத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக தேர்ச்சி என பதிவு செய்து சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
ஆழ் கடலில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய 7 வயது சிறுமி
ஆலந்தூர், ஆக.1 சென்னையை அடுத்த துரைப்பாக்கம் காரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர். ஆழ்கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற விழிப்புணர்வு செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்கடலில் ஒரு இணையருக்கு திருமணமும் நடத்தி வைத்தார்.
அரவிந்தனின் 7 வயது மகள் தாரகை ஆராதானா. இவர், ஆழ் கடலில் நீச்சல் பயிற்சி செய்தார். அப்போது கடலில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் இருந்ததை கண்டார். இதையடுத்து நீலாங்கரை அருகே ஆழ்கடலில் இறங்கி அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தார்.
இது தொடர்பாக தாரகை ஆராதனா கூறியதாவது:-
கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கிடப்பதையும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் கண்டு எனது தந்தையுடன் சேர்ந்து ஆழ் கடலில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினேன். கடலில் மீன்கள் குறைய நாமும் காரணம். பிளாஸ்டிக்கால் கடல் வாழ் உயிரினங்கள் அழிகிறது. பிளாஸ்டிக்கால் கடல் பசு உயிரினத்தை அழிவில் இருந்து காக்க கடலில் இறங்கி சுத்தம் செய்ய போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓய்வு பெற்ற அன்றே
ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்
வருங்கால வைப்பு நிதி அலுவலகம் ஏற்பாடு
சென்னை, ஆக.1 சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 சி.அமுதா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.ஓ.), பி.எப். திட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பிரயாஸ் என்ற திட்டத்தின் கீழ், ஓய்வு பெற்ற அன்றே ஓய்வூதிய பலன்களுக்கான உத்தரவுகளை அளித்து வருகிறது. அந்த வகையில் இந்திய எண்ணெய் கழகம் (அய்.ஓ.சி.), அசோக் லேலாண்ட், இண்டகிரேட்டட் எண்டர்பிரைசஸ், எஸ்.ஆர்.எப். ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய உத்தரவுகள் 30.7.2021 அன்று வழங்கப்பட்டன.
இந்த உத்தரவுகளை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுதிர்குமார் ஜெய்ஸ்வால் வழங்கினார். உதவி ஆணையர் பி.சீனிவாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment