வேலூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மண்டலங்களின் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு (19.07.2021 முதல் 31.07.2021 வரை) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 3, 2021

வேலூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மண்டலங்களின் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு (19.07.2021 முதல் 31.07.2021 வரை)

 தமிழர் தலைவர் நிறைவு விழாவில் பங்கேற்பு

சென்னை, ஆக. 3-  வேலூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரி மண்டலங்களின் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு (19.07.2021 முதல் 31.7.2021 வரை) சிறப்பாக நடைபெற்றது.

அதன் விவரம் வருமாறு:

தந்தை பெரியாரும் சமூக நீதியும்

19.7.2021 முதல் நாள் பயிற்சி வகுப்பு-தந்தை பெரியாரும் சமூகநீதியும் - வகுப்பு ஆசிரியர் கோ. கருணாநிதி வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்.

முதலாவது மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு, காணொலி வாயிலாக 19.07,2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் அறிமுக உரையை வேலூர் மண்டல மகளிரணி செயலாளர் . ஈஸ்வரி  அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக கோ.கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்) அவர்கள்தந்தை பெரியாரும் சமூக நீதியும்என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை நடத்தினார். வகுப்பிற்கு சிறப்பு விருந்தினராக பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் மருத்துவர் சோம. இளங்கோவன் அவர்கள் வருகை புரிந்தார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரி யாரின் பொன்மொழிகள் மாணவி அன்பு கனி அவர்களால் வாசிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் கேட்கப் பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.சுஷ்மிதா அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகள் யாழ்சுபா, சுஷ்மிதா, முனியம்மாள், ஜெயந்தி, காயத்திரி  அவர்கள் பரிசுகளை வென்றார்கள்.இவர்களுக்கு வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை சார்பில் 100 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.  வசுமதி நன்றி கூறினார்.

தந்தை பெரியார் - ஓர் அறிமுகம்

20.07.2021  இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பு - “தந்தை பெரியார் - ஓர் அறிமுகம்“ - வகுப்பு ஆசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்).

இரண்டாவது மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு, காணொலி வாயிலாக 20.07.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை வேலூர் மாவட்ட திராவிட மகளிர் பாசறை அமைப் பாளர்   மருத்துவர்  தி. அனிதா அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு ஆசிரியராக  கவிஞர்  கலி.பூங்குன்றன்  (மாநில துணைத் தலைவர்,திராவிடர் கழகம்) அவர்கள்தந்தை பெரியார் ஓர் - அறிமுகம்என்ற தலைப்பில் பெரியார் குறித்தும், பெண் ணுரிமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை நடத்தினார் ,மேலும் தந்தை பெரியாரோடு உடன் பயணித்து பெண்கள் கல்வி குறித்து தந்தை பெரியார் மகிழ்ந்ததை கைதட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியதை நெகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டு  பேசினார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சியாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்கள் கேள்விகளுக்கு கவிஞர் அவர்கள் சிறப்பான பதில் அளித்து அவர்கள் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் மாணவி ஜெயந்தி அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.தமிழேந்தி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவி வசந்திக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி அவர்கள் கருத்துரை வழங்கினார்கள். சு.வசுமதி நன்றி கூறினார்.

தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்

21.07.2021 மூன்றாம்  நாள் பயிற்சி வகுப்பு - “தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள்” - வகுப்பு ஆசிரியர் துரை. சந்திரசேகரன்  (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்).

மூன்றாவது  மகளிருக்கான பயிற்சி வகுப்பு 21.7.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்பு ரையையும்  ஆற்றினார். மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை கடலூர் மாவட்ட மகளிரணி தலைவர் முனியம்மாள் அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொது செயலாளர்) அவர்கள் தந்தை பெரியார்  நடத்திய போராட்டங்கள் என்ற தலைப்பில் பெரியார் குறித்தும், கள்ளுக்கடை மறியல் , மொழி திணிப்பு, தேசியக்கொடி எரிப்பு போர், வைக்கம் போராட்டம், மேலும் இவை போன்று எந்தெந்த வருடத்தில் எப்படிப்பட்ட போராட்டங்கள் பெரியாரால் நடத்தப்பட்டன என்பதை குறித்தும், போராட்டங்களால் சிறைசென்றவர்களின் நிலை யைக்  குறித்தும் , ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், தீண்டாமை, காணாமை, அண்டாமை போன்ற ஜாதிக் கொடுமைகள் பற்றியும் மாணவர்களுக்கு சிறப்பான  பயிற்சி வகுப்பை நடத்தினார் ,மேலும் தந்தை பெரியாரோடு உடன் பயணித்து பெண்கள் நடத்திய மறியல்கள்  குறித்தும், தந்தை பெரியாரின் சிறை வாசத்தை குறித்தும்,  நெகிழ்ச்சியுடன்  குறிப்பிட்டு  பேசினார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சியாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்கள் கேள்வி களுக்கு துரை.சந்திரசேகரன் அவர்கள் சிறப்பான பதில் அளித்து அவர்கள் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் மாணவி  அறிவுமதி அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.ஜெயந்தி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவி வசந்திக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு  வசுமதி நன்றி கூறினார்.

நீதி கட்சி - சுயமரியாதை இயக்க வரலாறு

22.07.2021 நான்காம்  நாள் பயிற்சி வகுப்பு - “நீதி கட்சி - சுயமரியாதை இயக்க வரலாறு” - வகுப்பு ஆசிரியர் சு. அறிவுக் காரசு  (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்).

நான்காவது  மகளிருக்கான பயிற்சி வகுப்பு 22.7.2021 இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை திருப்பத்தூர்  மாவட்ட மகளிரணி தலைவர் . கவிதா அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளி ருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக சு.அறிவுக்கரசு  திராவிடர் கழக செயலவைத் தலைவர்  அவர்கள்நீதிக்கட்சி, சுய மரியாதை  இயக்க வரலாறுஎன்ற தலைப்பில் பெரியார் குறித்தும், நீதிக்கட்சி வரலாறு, அவற்றின் போராட்டங்கள் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த  நன்மை அவற்றின் சாதனை, பற்றியும் மாணவர்களுக்கு சிறப்பான  பயிற்சி வகுப்பை நடத்தினார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சியாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட் டனர். அவர்கள் கேள்விகளுக்கு சு.அறிவுக்கரசு அவர்கள் சிறப்பான பதில் அளித்து அவர்கள் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் மாணவி  யாழ்சுபா அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.தமிழ்செல்வி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். வசுமதி நன்றி கூறினார்.

தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்

23.07.2021 அய்ந்தாம்  நாள் பயிற்சி வகுப்பு - “தமிழர் தலைவரின் தனித்தன்மைகள்   - வகுப்பு ஆசிரியர் நம். சீனிவாசன் (பெரியாரியல் சிந்தனை உயராய்வு மய்யம்).

அய்ந்தாவது நாள் மகளிருக்கான பயிற்சி வகுப்பு 23.7.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு  தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ. ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையை ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை வேலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் திராவிடர் கழகம் .இரம்யா அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள்தமிழர் தலைவரின் தனித்தன் மைகள்என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் குறித்தும், தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியாருடன் பயணித்ததையும், அவரின் கொள்கை பிடிப்புகளைப் பற்றியும், அவரின் வாழ்வியல் சிந்தனைகளை குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பை நடத்தினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் மாணவி ...அபிநயா அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.செல்வராணி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவி சுஷ்மிதா.யாழ்சுபா அவர் களுக்கு  சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பயிற்சிப் பட்டறைக்கு மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி அவர்கள் கருத்துரையை வழங்கினார்கள். நன்றியுரை வசுமதி அவர்கள்.

தந்தை பெரியாரின் அணுகுமுறை

24.07.2021 ஆறாம்  நாள் பயிற்சி வகுப்பு - “தந்தை பெரியாரின் அணுகுமுறை” - வகுப்பு ஆசிரியர் வழக்குரைஞர் . அருள்மொழி    (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்).

ஆறாவது  மகளிருக்கான பயிற்சி வகுப்பு 24.7.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு  தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு ஆசிரியராக ,அருள்மொழி (வழக்கு ரைஞர் கழகத்தின் பிரச்சார செயலாளர்) அவர்கள்  தந்தை பெரியாரின் அணுகுமுறை  என்ற தலைப்பில்  மாணவர்களுக்கு சிறப்பான  பயிற்சி வகுப்பை நடத்தினார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சியாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்களின் கேள்விகளுக்கு  சிறப்பான பதில் அளித்து அவர்களின் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் மாணவி  பொன்சத்யா அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.தமிழ்செல்வி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவிகள் ஜெயந்தி,யாழ்சுபா, தமிழ் செல்வி மற்றும் சுஷ்மிதா அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நன்றியுரை வசுமதி அவர்கள்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள்

26.07.2021 ஏழாம்  நாள் பயிற்சி வகுப்பு - “தந்தை பெரி யாரின் பகுத்தறிவு சிந்தனைகள் - வகுப்பு ஆசிரியர்

. தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்).

ஏழாவது நாள் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு, காணொலி வாயிலாக   26.07.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு   தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப் பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் .கலைமணி பழனியப்பன் அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக  .தேன்மொழி (திராவிடர் கழக மாநில மகளிரணி அமைப்பாளர்) அவர்கள் தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வகுப்பை நடத்தினார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சியாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்களின் கேள்விகளுக்கு  சிறப்பான பதில் அளித்து அவர்களின் அய்யத்தை போக் கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன் மொழிகள் மாணவி  ராஜகுமாரி அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி.ராஜகுமாரி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப் பூர்வமான வினாவை தொடுத்த மாணவிகள் ஜெயந்தி, மற்றும் சுஷ்மிதா அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பெண்ணுரிமை சிந்தனைகள்

27.07.2021 எட்டாம்  நாள் பயிற்சி வகுப்பு - “தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” - வகுப்பு ஆசிரியர் பா. மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்).

எட்டாவது  மகளிருக்கான பயிற்சி வகுப்பு 27.7.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு காணொலிவழியாக தொடங்கப் பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை செங்கல்பட்டு மாவட்ட மகளிரணி தலைவர் சு. ஆனந்தி அவர்கள் நிகழ்த்தினார்கள். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக செ மே. மதிவதனி (திராவிடர் கழக மாநில  அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை),  அவர்கள்  தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பில்  மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வகுப்பை நடத்தினார். மேலும் விதவை மறுமணம், பெண்களின் ஒழுக்கம் ,கற்பு நெறி, பெண்கல்வி, பெண்களின் ஆடை அலங்காரம், என விரிவாக வகுப்பு எடுத்தார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சி யாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்களின் கேள்விகளுக்கு  சிறப்பான பதில் அளித்து அவர்களின் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் வசுமதி அவர் களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி. செல்வராணி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவி வசந்தி  அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஜாதி ஒழிப்புப் பணி

28.07.2021 ஒன்பதாம் நாள்  பயிற்சி வகுப்பு - “தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணி” - வகுப்பு ஆசிரியர் சே. மெ. மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்).

ஒன்பதாவது பயிற்சி வகுப்பு காணொலி வாயிலாக 28.7.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை புதுவை மாநில பொதுக்குழு உறுப்பினர்  விலாசினி அவர்கள்  நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக பா.மணியம்மை (வழக்குரைஞர்  திராவிடர் கழக மாநில  செயலாளர்  திராவிட மகளிர் பாசறை)  அவர்கள்  தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்பு பணிகள்  என்ற தலைப்பில்  மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வகுப்பை நடத்தினார். , அவரின் வகுப்பு குறித்து பயிற்சியாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்களின் கேள்விகளுக்கு  சிறப்பான பதில் அளித்து அவர்களின் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் அஸ்வினி அவர்களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி. கண்ணம்மா அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவி வசந்தி  அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

29.07.2021 பத்தாம் நாள்  பயிற்சி வகுப்பு - “தமிழக்கு என்ன செய்தார் பெரியார்?” - வகுப்பு ஆசிரியர் மு. சு. கண்மணி (பெரியாரியல் சிந்தனையாளர்).

பத்தாவது காணொலி வாயிலான மகளிருக்கான பயிற்சி வகுப்பு 29.07.2021 அன்று மாலை சரியாக 6 மணிக்கு தொடங் கப்பட்டது. இந்தப் பயிற்சி வகுப்பில் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஜெ.ரமா பிரபா அவர்கள் தொடக்க உரையையும் இணைப்புரையையும்  ஆற்றினார். மேலும் இப் பயிற்சி வகுப்பிற்கு அறிமுக உரையை வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் லதா அவர்கள் நிகழ்த்தினார். மேலும் மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பிற்கு  ஆசிரியராக முனைவர் பேராசிரியர் மு.சு.கண்மணி   அவர் கள்  தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் என்ற தலைப்பில்  மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வகுப்பை நடத்தினார். ,  விரிவாக வகுப்பு எடுத்தார். அவரின் வகுப்பு குறித்து பயிற்சி யாளர்கள்  கருத்து தெரிவித்து கேள்விகளும் கேட்டனர்.அவர்களின் கேள்விகளுக்கு  சிறப்பான பதில் அளித்து அவர்களின் அய்யத்தை போக்கினார். இந் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியாரின் பொன்மொழிகள் சோபனா அவர் களால் வாசிக்கப்பட்டது.  இப்பயிற்சி வகுப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை சொல்லி மாணவி. அறிவுமதி அவர்கள் 100 ரூபாய் பரிசை பெற்றார். மேலும் இவ்வகுப்பில் நல்லதொரு வினாக்களை முன்வைத்த அய்ந்து மாணவிகளில், அறிவுப்பூர்வமான வினாவை தொடுத்த மாணவி காயத்திரி  அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வகுப்பு மாணவர்களுக்கான பரிசுகள் அறிவிப்பு

மண்டலங்கள் சார்பில் பதிவு செய்து வகுப்புக்கு வருகை புரிந்தவர்கள் 54 பேர் - அதில் 28 பேர் தேர்வு எழுதினர்

முதல் பரிசு - ரூ. 10000

இரண்டாம் பரிசு - ரூ. 5000

இந்த பரிசினை பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் வழங்கும் பெரியார் பன்னாட்டு மய்யம் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கு நன்றிகள்.

எல்லாவற்றிலும் சிறப்பாக பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மகளிருக்கு தந்தை பெரியாரின்பெண் விடுதலைஎன்ற நூலை பரிசாக வழங்குவதாக கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மா அறிவித்துள்ளார்.

நீதிமன்றங்களில் பெரியார்

பயிற்ச்சியில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு நாள்தோறும் பரிசுகள் வழங்கப்பட்டது.பெரியார் ஆயிரம் கேள்விகளில் சரியான பதில் சொன்ன ஒருவருக்கு தினசரி 100 ரூபாய் வழங்கியது கடலூர் மண்டல ரமா பிரபா அவர்கள் .ஆசிரியரிடம் சிறப்பாக கேள்வி கேட்டு வெற்றி பெற்றவார்கள் இருபது பேர். அவர்கள் ஒவ்வொரு வருக்கும் 100 ரூபாய்  பரிசு வழங்கியவர்கள் வேலூர் மாவட்ட மகளிரணி மகளிர் பாசறை மகளிர்.பயிற்சி ஆசிரியர் வகுப்பு குறித்து சிறப்பாக பதிவு செய்தவர்கள் 25 பேர்.அதில் செல்வராணி. முனியம்மாள் ஆகியோருக்குநீதிமன்றங்களில் பெரியார்என்ற நூலை வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் லதா அவர்களும் ,முனியம்மாள் தமிழேந்தி ஆகி யோருக்கு நூறு ரூபாய் வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் கலைமணி அவர்களும் வழங்கினார்கள். ஜெயந்தி, யாழ்சுபா, முனியம்மாள், தமிழ்செல்வி ஆகியோருக்குஅய்யாவின் அடிச்சுவட்டில்என்கிற நூலை வேலூர் மண்டல மகளிரணி செயலாளர் ஈஸ்வரி அவர்கள் வழங்கி னார்.

கடவுள் மறுப்பின் கதை

தமிழ்செல்வி, மாளவிகா,முனியம்மாள் ஆகியோருக்கு தமிழர் தலைவரின்வாழ்வியல் சிந்தனைகள்என்ற நூலும் சவுந்தர்யா, யாழ்சுபா. ஜெயந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர்வாழ்வியல் சிந்தனைகள்மற்றும் பேனா பரிசாக வழங்கியவர் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா அவர்கள்

ராஜகுமாரி, ஜெயந்தி, சவுந்தர்யா, சுஷ்மிதா, முனியம்மாள், மாளவிகா, வசந்தி, யாழ்சுபா, தமிழ்செல்வி, கலா, மோனிஷா ஆகியோருக்கு செயலவைத்தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் எழுதியபார்ப்பன இலக்கியங்கள்  கடவுள் மறுப்பின் கதைஎன்ற இரு நூல்களையும் வழங்கியவர் மாநில மகளிரணி அமைப்பாளர் .தேன்மொழி அவர்கள்.

தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்

தமிழர் தலைவருடைய பொன்மொழிகளைப் பதிவிட்டு வெற்றி பெற்ற அன்புக்கனி,அறிவுமதி,ஜெயந்தி,ஆகியோருக்கு நம்.சீனிவாசன் அவர்கள் எழுதியதமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்என்ற நூல் ஆசிரியர் கையொப்பத்தோடும் தொடர்ந்து வகுப்புக்கு வருகை புரிந்த 54 பேருக்கு தந்தை பெரியாரின்பெண் ஏன் அடிமையானாள்நூலும் வழங்கி சிறப்பித்தவர் கடலூர் மண்டல மகளிரணி செயலாளர் ரமா பிரபா.

தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களின்  நிறைவு விழாப் பேருரை 31.7.2021 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு கழகத்தின் துணைப்பொது செயலாளர் ,இன்பக்கனி அவர்கள் தலைமை ஏற்றார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் மணியம்மை வரவேற் புரையும் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் செ,மெ.மதிவதனி இணைப்புரையும் வாழங்கினார்கள்

மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி அவர்களும் மாநில மகளிரணி அமைப்பாளர் .தேன்மொழி அவர்களும் பயிற்சி வகுப்பு அறிக்கை வாசித்தனர்

பெரியார் உயராய்வு மய்ய நம்,சீனிவாசன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார்

பொதுச்செயலாளர்கள் தஞ்சை ஜெயக்குமார் அவர்களும் துரை,சந்திரசேகரன் அவர்களும் புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி அவர்களும் மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களும் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்தனர்,

கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்களும் கழகத்தின் பிரச்சார செயலாளர் அருள்மொழி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்,

இறுதியில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்

மாணவர்களை பாராட்டி பேசினார்.மேலும் மாணவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அவர்களுக்கு புரியும் படி மிக சிறப்பாக எடுத்து உரைத்தார்,

மாநில மகளிரணி பொருளாளர் அகிலா அவர்கள் நன்றி கூறினார்

பதாகையை வடிவமைத்த வேலூர் மாவட்ட தலைவர் வி,,சிவக்குமார் அவர்களுக்கும் இணைய வகுப்பு எடுத்த வி.சி.வில்வம் அருண் காந்தி அவர்களுக்கும் தஞ்சை ஜெயக் குமார் அவர்களுக்கும் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்திய துணை பொதுச்செயலாளர் .இன்பக்கனி அவர்களுக்கும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கும் இத்தகைய பெரும் வாய்ப்பை ஏற்பாடு செய்த  நம்முடை தமிழர் தலைவர் அவர்களுக்கும் பெரியார் உயராய்வு மய்யத்திற்கும் பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு . தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்) மற்றும் ஜெ.ரமாபிரபா (கடலூர் மண்டல மகளிர் அணி செயலாளர்), சு.வசுமதி (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) ஆகிய மூவரும் இணைந்து ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக செயல்பட்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment