சென்னை, ஆக. 11- தமிழ்நாட் டில் புதிதாக 1,893 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. முதியவர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் நேற்று (10.8.2021) ஆண்கள் 1,086, பெண் கள் 807 என மொத்தம் 1,893 பேர் கரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டனர். அதிக பட்சமாக கோவையில் 224, சென்னையில் 209, ஈரோட்டில் 169, செங்கல்பட்டில் 105 பேர் தொற்றால் பாதிக் கப்பட்டுள்ள னர். இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண் ணிக்கை 25 லட் சத்து 79,130 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 25 லட்சத்து 24,400 பேர் குணமடைந்துள்ள னர். நேற்று மட்டும் 1,930 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழ்நாடு முழுவதும் 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனை களில் நேற்று நடுத்தர வய தினர், முதியவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற் றால் உயிரிழந்தவர்கள் எண் ணிக்கை 34,367 ஆக உயர்ந்துள் ளது. சென்னையில் மட்டும் 8,342 பேர்உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தமிழ்நாடு சுகா தாரத் துறை வெளியிட்ட செய் திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment