ஈராக்கில் இறுதி நிகழ்வில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 13 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

ஈராக்கில் இறுதி நிகழ்வில் சரமாரி துப்பாக்கிச்சூடு; 13 பேர் பலி

பாக்தாத், ஆக. 2- ஈராக்கில் அய்.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக் கத்தை அமெரிக்க படைகளின் உதவியோடு ஈராக் ராணுவம் ஒடுக்கியது. அதனை தொடர்ந்து அய்.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட தாக கடந்த 2017-ம் ஆண்டு ஈராக் அறிவித்தது.

ஆனால் சமீப காலமாக அங்கு மீண்டும் அய்.எஸ். பயங்கரவாதிகளின் கை ஓங்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பாக்தாத் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்க ளில் அய்.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் யாத்ரிப் நகரில் உள்ள ஒரு மயானத்தில் இறுதி நிகழ்வு நடைபெற்றுக் கொண் டிருந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர் களை துப்பாக்கியால் சரமாரி யாக சுட்டனர். இதனால் அங்குபெரும் பதற்றமும் பீதியும் உரு வானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் பயங்கரவாதிகள் சற்றும் ஈவிரக்கமின்றி கண் ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளினர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.

No comments:

Post a Comment