ஆக.13 முதல் - செப்.21 வரை 29 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 11, 2021

ஆக.13 முதல் - செப்.21 வரை 29 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவிப்பு

 புதுடில்லி, ஆக.11 13.8.2021 அன்று தொடங்கவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர், செப்.21ஆம் தேதி வரை 29 நாள்கள் நடக் கிறது. அலுவல் ஆய்வுக் குழு வில் இந்தமுடிவு எடுக்கப் பட்டதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங் கில் வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது. அன்று அர சின் பெது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 14ஆம் தேதி, முதல்முறையாக வேளாண் துறைக்கானதனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்றுமுடிவு செய் வதற்காக, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் தலை மைச் செயலகத்தில் நேற்று (10.8.2021) காலை நடந்தது. பேரவைத் தலைவர் மு.அப் பாவு தலைமையில் நடந்த கூட் டத்தில் அவை முன்னவர் துரை முருகன், மூத்த அமைச்சர்கள் .பொன்முடி, அய்.பெரியசாமி, கே.என்.நேரு, பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் செல்வப்பெருந்தகை (காங் கிரஸ்), சிந்தனைச்செல்வன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜி.கே.மணி(பாமக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். முக்கிய எதிர்க் கட்சியான அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

கூட்டத்துக்கு பிறகு செய் தியாளர்களிடம் பேரவைத் தலைவர் கு.அப்பாவு கூறியதாவது:

சட்டப்பேரவையில் 13.8.2021 அன்று பட்ஜெட்டை நிதியமைச்சர்தாக்கல் செய்கிறார். இது காகிதம் இல் லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் களது மேஜையில் கணினி வைக்கப்படும்.நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை வாசிக்க வாசிக்க, கணினியில் அந்த வாசிப்பின் பகுதி வந்து கொண்டிருக்கும். அதன் அரு கில் அவர்களுக்கு, கையடக்க கணினிவைக்கப்பட்டிருக்கும். அதில், புத்தகத்தில் இருப்பது போன்று பக்கங்களை பார்த் துக் கொள்ளலாம். அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் வரை, காகித வடிவிலும் பட்ஜெட் உள்ளிட் டவை வழங்கப்படும்.

ஆளுநர் உரையில் தெரிவிக் கப்பட்டதுபோல, தமிழ்நாட் டில் முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற் காக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், விதிகள் குழு கூடி முடிவெடுத்தது. அதன்படி, 14.8.2021 அன்று தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

பட்ஜெட் மீது 16ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை 4 நாள்கள் விவாதம் நடக்கும். விவாதத்துக்கு நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் பதில் உரை அளிப்பார்கள்.

ஆக.23 முதல் செப்.21ஆம் தேதி வரை 23 நாள்கள் துறை வாரியான மானியக் கோரிக் கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும். கரோனா காலம் என்பதால், பல கேள்வி களுக்கு இன்னும் பதில் வர வில்லை. போதிய அளவுக்கு பதில் வந்ததும் கேள்வி நேரம் இடம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆக.23ஆம் தேதி நீர்வளத் துறை, 24 - நகராட்சி நிர்வாகம், 25 - ஊரக வளர்ச்சி, 26 - கூட்டு றவு, உணவு, 27- உயர்கல்வி, பள்ளிக்கல்வி,28 - நெடுஞ்சாலை கள், பொதுப்பணி (கட்டடங் கள்) ஆகிய துறைகளின் மானி யக் கேரிக்கைகள் மீதான விவா தம் நடக்கிறது. இடையில், ஆக.29, 30, செப்.5, 10, 11, 12, 19 ஆகிய நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. செப். 18, 20 ஆகிய2 நாள்களும் காவல், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கேரிக் கைகள் எடுத்துக் கெள்ளப்பட உள்ளன. நிறைவு நாளான செப்.21ஆம் தேதி அரசினர் சட்ட முன்வடிவுகள் நிறை வேற்றப்படும். மொத்தமாக ஆக.13 முதல் செப்.21ஆம் தேதி வரை 29 நாள்கள் அவை அலு வல்கள் நடக்கின்றன.

No comments:

Post a Comment