ஆக. 12: யானைகள் தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 14, 2021

ஆக. 12: யானைகள் தினம்

யானை தனது வாழ்நாளில் ஒரு காட்டையே உருவாக்கும்

நாளொன்றுக்கு நாம் எவ்வளவு சாப்பிடு வோம். நல்ல ஆரோக்கியமானவர்கள் 3 முதல் 4 கிலோவரை சாப்பிடலாம், போட்டி யாளர்கள் 6 கிலோவரை சாப்பிடலாம், அதே நேரத்தில் அதிகமாக 5 லிட்டர் முதல் 7 லிட்டர் வரைதண்ணீர் குடிக்கலாம். அவ்வளவே.

மனிதர்கள் உயிர்வாழ்வது குறித்து எந்த ஒரு விமர்சனமும் இல்லை. பூமியை மீண் டும் பழைய பொலிவுடன் உருவாக்குவதும் அதைப் பாழாக்குவதும், மனிதர்களின் நடவடிக்கைகள் தான்.

யானைகள் மட்டுமல்ல? இதர உயிரினங் கள் அனைத்துமே பூமியின் வாழ்வியலில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இதில் ஒரு யானை உண்ணும் உணவின் மூலம் ஒரு வனத்தையே உருவாக்கிவிடும்.

ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும். சராசரியாக அதனோட உடல் எடையில் 5 சதவிகித அளவான உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100-150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். யானைகள் அதிக அளவு உணவை தொடர்ந்து உண்பதால் அதன் இரைப்பை அமிலம் உணவில் உள்ள 50 விழுக்காடு பொருட்களை மட் டுமே கரைக்கிறது. மற்றவை அனைத்தும் அப்படியே சாணம் வழியாக வெளியேறு கிறது, இவ்வாறு வெளியேறுபவைதான் விதைகளும் குச்சிகளும், யானைகளின் உடலில் சென்று வெளியேவரும் விதைகள் இயற்கையிலேயே சக்திவாய்ந்த உரம் கொண்ட விதைகளாக இருந்து எந்த ஒரு சூழலிலும் உறுதியாக வளரும் தன்மை கொண்டவையாக உள்ளன.

இந்த 250 கிலோ உணவில் 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள், அதில் 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணில் விதைக்கப்படும்.

ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறது. எண்ணிக் கையில் சராசரியாக ஒரு யானை ஒரு நாளைக்கு 300-500 விதைகளை விதைத் துக் கொண்டு இருக்கிறது,

மனிதர்கள் அதிகபட்சம் தங்களது உண விற்காக தானியங்களை விதைக்கிறார்களே தவிர பூமிக்காக விதைப்பது கிடையாது,

500 விதைகளில் குறைந்தது 100 விதை களாவது முளைத்து விடும். அதன் படி ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஆண்டு முழுவதும் 36 ஆயிரத்து அய்நூறு மரங்கள். மொத்தமாகப் பார்த்தால் ஒரே ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளரக் காரணமாகிறது.

யானைகள் விதைக்கிறது என்றால் அந்த விதையை மண்ணுக்குள் சென்று புதைக்கும் பணியை சாணி வண்டுகள் செய்கின்றன, யானைகளின் சாணியை உருட்டி மண்ணுக்குள் புதைக்கின்றன, சாணியும் மண்ணுக்கு உரமாக - விதைகள் தானாகவே பூமிக்குள் சென்றுவிடுகிறது. அதன் மூலம் மண் வளம் பெற்று விதைகள் மீண்டும் முளைக்கின்றன, பெரிய யானை முதல் சிறிய வண்டுவரை பூமியைப் பாது காக்க தங்களது பொறுப்புகளை மிகவும் சிறப்பாகச் செய்கின்றன.

சங்க இலக்கியங்களில் மா, வேழம், கரி, சிந்தூரம், அத்தி, அருகு, ஆம்பல், அலுவல், இபம், இம்மடி, கைம்மா போன்ற 50ற்கும் அதிகமான பெயர்களில் அழைக்கப்படும் விலங்கு யானை. தமிழர்களின் வாழ்வியலோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.

 நமது பண்டைய வாழ்விய லில் பெண்கள் கூட யானையை அடக்கியுள்ளனர். மதங்கொண்ட யானையை அடக்கிய அரியாத்தை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் வேழம்படுத்த வீராங்கனைஎன்னும் நாட்டுக்கூத்து மூலம் யானையைப் பெண்களும் தனியாக அடக்குவதையும், வதம் செய்வதையும் வீரத்தின் அடையாளமாகவே கருதினர்.

No comments:

Post a Comment