ஒட்டுமொத்த வரவு ரூ.1,26,644.15 கோடி- செலவினம் ரூ.2,61,188.57 கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 13, 2021

ஒட்டுமொத்த வரவு ரூ.1,26,644.15 கோடி- செலவினம் ரூ.2,61,188.57 கோடி

அனைத்துத் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழி;   

100 நாள் வேலைத் திட்டம் இனி 150 நாள்கள்;

பள்ளிக் கல்விக்கு ரூ.32,599 கோடி - கல்விக் கொள்கைகளை உருவாக்கக் குழு 

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3  வரி குறைப்பு

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

சென்னை, ஆக.13 - கல்வி, தமிழ் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், நீர் வளத்துறை முதலியவற்றை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடைக்கால பட்ஜெட்டை இன்று (13.8.2021) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மூன்று மணிநேரம் இதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாடு காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில் காலியாக உள்ள 14,317 இடங்களை நிரப்ப நடவடிக்கை.

தீ விபத்து இடத்திற்கு விரைவில் செல்ல தீயணைப்பு நிலையங்கள் அறிவியல்பூர்வ ஆய்வின்படி அமைக்கப்படும்.

அடுத்த 5ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கு போதிய கட்டடங்கள் இருபது உறுதி செய்யப்படும்.

நீதித்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங் களையும் நிரப்ப தமிழ்நாடு அரசு ஆதரவு அளிக்கும்.

நீதித்துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.1713.30 கோடி ஒதுக்கீடு.

எளிதில் வெள்ளப்பாதிப்புகளை ஏற்படும் 4,133 இடங் களை கண்டறியப்பட்டு சரிசெய்யும் பணிகள் விரைவுப் படுத்தப்படும்.

நிலம் கையகப்படுத்துதலை எளிமையாக்க நடவடிக்கை எடுத்து இழப்பீடு உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப் படும்.

பேரிடர் மேலாண்மைக்காக 15ஆவது நிதிக்குழு பரிந் துரைத்த ரூ.1,360 கோடி போதுமானதாக இல்லை.

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும் மற்றும் 111 கோடி ரூபாய் செலவில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்.

பாசனத்திற்காக மொத்தம் ரூ.6,607 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

கரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.9,370 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நதிநீர் பிரச்சினைக்காக கேரள அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

தமிழ்நாடு மீன்வளத்துறைக்கு ரூ.303 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண் காணிப்பு மய்யம் தமிழகத்தில் அமைக்கப்படும்.

கடல் பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு பொன்ற மற்று வாழ்வாதார திட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

தரங்கம்பாடி, திருவொற்றியூர், ஆற்காட்டுத்துறை மீன்பிடி துறைமுகத் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும்.

புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க 6.25 கோடி ரூபாயில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

5 ஆண்டுகளில் பன்னாட்டு நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்

ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

2021-22ஆம் ஆண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டிதரப்படும்.

1.27கோடி குடும்பங்களுக்கு  வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரிட் வீடு கிடைப்பது உறுதிசெய்யப்படும்.

கிராமப்புறங்களில் ரூ.400 கோடி ரூபாய் செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.

ஊரக வேலை உறுதித்திட்ட பணி நாள்களை 100 நாள்களில் இருந்து 150 நாள்களாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு  நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3கோடி அளிக்கப்படும்.

கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு மற்றும் கீழடியில் திறந்தவேளி அருங்காட்சியகம் அமைக்கப் படும்.

சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.500 கோடி சிறப்பு கோவிட் கடன் உள்ளிட்ட 20ஆயிரம் கோடி கடன் உறுதிசெய்யப்படும்.

36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.

அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் நடைபாதைகள் அமைக்கப்படும்.

அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் படும்.

திருச்சியில் புதிதாக இருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடியும் அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் நடப்பாண்டு முதல் ஆயிரம் கோடி ரூபா யில் கலைஞர் நகர்புற மேம்பாடுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள பழைமையாக அரசு கட்டடங்களை புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையிலுள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

10 லட்சம் பேர் வசிக்கும் நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமாயமாக்கலை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை.

அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சிமொழி

தமிழ் வளர்ச்சி குறித்த சில அறிவிப்புகள்:

தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது உறுதிப்படுத்தப் படும்.

தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட யூனிகோடு எழுத்துரு அனைத்து அரசு துறைகளில் பயன் படுத்துவது உறுதி செய்யப்படும்.

உலக அளவிலான செவ்வியல் இலக்கிய படைப்புகள், தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபபடும்

சிங்கார சென்னை 2.0 திட்டம்

சீர்மிகு நகர திட்டத்திற்கு 2, 350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மொத்தம் 2,056 ஆயிரம் கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டம் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள நீர் வழிகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் 2,371 கோடி செலவில் தீவிரமாக செயல் படுத்தப்படும்.

ஆந்திர பிரேதேச கிருஷ்ணா நீர் தேக்கத்திலிருந்து சென்னை நீர் நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கு சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

சென்னை நகர கூட்டாண்மை திட்டம் விரைவில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதி உதவியுடன் தொடங்கப்படும்.

கணேசபுரம் சுரங்கப் பாதை, கொன்னூர் நெஞ்சாலை, தெற்கு உஸ்மான் பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் அமைக் கப்படும்.

ஒவ்வொரு வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்.

மக்கள் சேவையில் மாநகராட்சி, நமது சேவையில் நகராட்சி திட்டங்கள் மூலமாக அனைவருக்கும் இணையவழி சேவைகள் வழங்குவது உறுதி செய்யப்படும். நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், வரியற்ற பிற வருவாய் அதிகரிக்க தற்போது இருக்கும் சொத்துக்களின் மதிப்பை கூட்டுவதன் மூலம் வரும் வருவாயை வைத்து நவீன பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், சமுதாயக்கூடங்கள் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த அரசு தற்போதைய பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தி ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களாக தரம் உயர்த்தும். திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

மகப்பேறு விடுப்பு

மகளிர் அரசு ஊழியர்களுக்கான  மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப் படும்.

வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும்.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு.

கரோனாவால் பெற்றோரை இழந்த 5963 குழந்தைகளுக்கு ரூ.95 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது; அங்கன்வாடி மய்யங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48 கோடி.

அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 76 சதவீதத்திலிருந்து 53 சதவீதமாக குறைந்துள்ளது.

300 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்; சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும்; அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்

கனிமங்கள் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க புதிய கொள்கை உருவாக்கம்; புதிய கனிம வள கொள்கை மூலம் அரசின் வருவாய் பெருமளவு அதிகரிக்கப்படும்.

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்படி பொங்கலுக்கு 1.81 கோடி சேலை, வேட்டிகள் வழங்கப்படும்; பள்ளி சீருடைகளுக்காக ரூ.409 கோடி ஒதுக்கீடு.

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

பாதாள சாக்கடைத் திட்டம்

* 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் செயல் படுத்தப் படும்; அனைத்து நகரங்களிலும் திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத் தப்படும்

* சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும்

* குக்கிராமங்களை மேம்படுத்த ரூ.1,200 கோடி செலவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

* சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 கோடி மீண்டும் வழங்கப்படும்

தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர் களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்;  பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்படும்; மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு

கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025 இல் தொடங்கப்படும்

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது; 2,500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையிலிருந்து வாங்கப்படுகிறது.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும்.

மகளிர், மாற்றுத்திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்

623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்

குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி

நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்

சிஎம்டிஏ போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.

பொது சொத்து பராமரிப்பு பணிக் காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு: நிதி அமைச்சர்

சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என கூறினார்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்வு.

* 1,622 கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை சேவை வழங் கப்படும்; ரூ.400 கோடியில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.

 * அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு வழங்குவதை உறுதி செய்வோம்

* குக்கிராமங்களில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர்  தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்

* ரூ.2,000 கோடியில் ஜல் ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்

* கிராமப்புறங்களில் அமைந்துள்ள 1.27 கோடி குடும்பங்களுக்கும் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்

* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இணைய வழியில் கண்காணிக்கப்படும்; ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மய்யம் நிறுவப்படும்

* காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும்; ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் அமைக்கப்படும் என கூறினார்.

பெட்ரோல்மீதான வரி குறைப்பு

* பெட்ரோல் மீதான வரி ரூ.3 குறைப்பு. வரி குறைப்பு நடவடிக்கையால் நாட்டிலேயே தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கும் கீழே குறைந்துள்ளது.

பெட்ரோல் மீதான வரிக் குறைப்பு மூலம் தி.மு.. தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு-செலவுத் திட்டத்திற்கான நிதி ஆதாரங்கள்

* இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,18,991.96 கோடி ரூபாயாக உள்ள ஒட்டுமொத்த வரி வருவாய் மதிப்பீடுகளை, 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,02,495.89 கோடி ரூபாயாகக் குறைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன்.

* மொத்த வருவாய் வரவுகளில், மாநில அரசின் சொந்த வரி வருவாய் பெரும்பகுதியாக உள்ளது. இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,35,641.78 கோடி ரூபாயாக இருந்த மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மதிப்பீடுகள், 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு களில் 1,26,644.15 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 14,139.01 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி அல்லாத வருவாய், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும் சற்றுக் குறைவாக உள்ளது.

* 2021-2022 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒட்டுமொத்த வரு வாய் செலவினங்கள் 2,61,188.57 கோடி ரூபாயாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வரி முறையை சீர்செய்ய வல்லுநர்  குழு அமைக்கப்படும்

நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

அரசின் கடன்சுமையை சரிசெய்து நிதிநிலைமை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு நிதி சார்ந்த வழக்குகளை கையாள 'வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும். 1921ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமாக்கப்படும். வரிமுறையை சீர்செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும். ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன. அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அறிவதற்கான தரவுகளை திரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

No comments:

Post a Comment